/* */

மகாதீபத் திருவிழா: இரவு முழுக்க நடந்த மலர் அலங்காரம்

கார்த்திகை தீபத் திருவிழாவையோட்டி ஏழரை டன் பூக்களைக் கொண்டு பிரம்மாண்டமாக தயாரான அண்ணாமலையார் திருக்கோவில்.

HIGHLIGHTS

மகாதீபத் திருவிழா: இரவு முழுக்க நடந்த மலர் அலங்காரம்
X

மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள அண்ணாமலையார் கோவில் 

அண்ணாமலையார் திருக்கோவிலில் இன்று அதிகாலை அண்ணாமலையார் கருவறையின் முன்பு நான்கு மணிக்கு பரணி தீபமும் அதனைத் தொடர்ந்து மாலை கோவில் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

இன்று நடைபெற உள்ள மகாதீப திருவிழாவிற்காக அண்ணாமலையார் திருக்கோவில் மிக பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால பக்தர்கள் யாருக்கும் அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஆதித்யாராம் பவுண்டேசன் சார்பில் ஆந்தூரியம், பல்வேறு வகையான ரோஜாக்கள், வெண்தாமரை, செந்தாமரை உள்ளிட்ட 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாமரை பூக்கள், ஆர்சிட்ஸ், கார்னேஷன், ஜிப்சோபிலா உள்ளிட்ட 20 வகைகள் கொண்ட சுமார் 25 லட்சம் மதிப்பில், ஏழரை டன் பூக்களைக் கொண்டு அண்ணாமலையார் திருக்கோவில் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் சன்னதியில் உள்ள பலிபீடங்கள், கொடிமரங்கள், தீப தரிசன மண்டபம், உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பூக்களைக் கொண்டு அலங்காரம் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.

வண்ண வண்ண மலர்களைக் கொண்டு திருக்கோவில் மதில் சுவர்கள், தூண்கள் உள்ளிட்ட இடங்களில் தோரணங்கள் ,பல்வேறு வகையில் பூக்களைக் கொண்டு பிரத்தியேகமான வடிவில் பல்வேறு உருவங்கள் உள்ளிட்டவைகள் செய்யப்பட்டு திருவிழாவிற்கு அண்ணாமலையார் திருக்கோவில் பூக்களால் பிரம்மாண்டமாக காட்சி அளித்து வருகிறது.

Updated On: 19 Nov 2021 6:37 AM GMT

Related News