/* */

உர விற்பனை நிலையம், உரக் கிடங்குகளில் வேளாண்மை அதிகாரிகள் திடீர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் உர விற்பனை நிலையங்கள், உரக் கிடங்குகளில் வேளாண்மை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

HIGHLIGHTS

உர விற்பனை நிலையம், உரக் கிடங்குகளில் வேளாண்மை அதிகாரிகள் திடீர் ஆய்வு
X

உர விற்பனை நிலையங்கள் உரக் கிடங்குகளில் வேளாண்மை அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் யூரியா உரம் விற்பனை தொடர்பாக பெறப்பட்ட புகார்களை தொடர்ந்து வேளாண்மை இணை இயக்குனர் முருகன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள மொத்த மற்றும் சில்லரை உர விற்பனை நிலையங்கள் மற்றும் உரக்கிடங்குகளில் சிறப்பு ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது.

வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) விஜயகுமார் தலைமையில் மாவட்டத்தில் உள்ள 17 வட்டாரத்திலும் சிறப்புக்குழு அமைக்கப்பட்டு திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு பணி தொடர்ந்து 3 நாட்கள் நடக்க உள்ளது. ஆய்வின்போது, உர விற்பனை மையங்களில் உர மூட்டைகள் அரசு நிர்ணயித்த விலையில் வினியோகம் செய்தல், பாயிண்ட் ஆப் சேல்ஸ் கருவி மூலம் உரம் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படுதல், உர விற்பனை நிலையங்களில் உரிமங்களின் காலாவதி நாள், உர இருப்பு, கொள்முதல் செய்யப்பட்டதற்கான உரிய ஆவணங்கள் பராமரித்தல், உரங்களின் விலைப்பட்டியல் பலகைைய விவசாயிகளின் பார்வைக்கு தெரியும் படி வைத்திருத்தல் ஆகியவை குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் சந்தை, யூரியா உரம் பதுக்குதல், யூரியாவுடன் இதர இடுபொருட்கள், கட்டாயப்படுத்தி விற்பனை செய்தல் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வின்போது வேளாண்மை அதிகாரிகள் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்டத்துக்கு நடப்பு மாதத்திற்கு தேவையான யூரியா 2,271 டன் வரப்பெற்று, தனியார் மற்றும் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பிரித்தளிக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

Updated On: 11 March 2022 6:04 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  2. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  5. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...
  6. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 154 கன அடியாக குறைந்தது..!
  8. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  9. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு