/* */

திருவண்ணாமலை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, வாக்காளா் எண்ணிக்கை 20 லட்சத்து 53 ஆயிரத்து 618 ஆக உயா்ந்துள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
X

புதிய வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1.1.2024-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்ட வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி தலைமை வகித்தாா். அங்கீகரிக்கப்பட்ட அரசியில் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான முருகேஷ் வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்டாா். இதை, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியா் மந்தாகினி, ஆரணி வருவாய் கோட்டாட்சியா் தனலட்சுமி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மொத்தம் 8 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன.

1.1.2024-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி திருவண்ணாமலை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிக வாக்காளா்களும், போளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் குறைந்த அளவு வாக்காளா்களும் உள்ளனா்.

செங்கம் (தனி): 1,35,420 ஆண்கள், 1,37,525 பெண்கள், இதர பாலினத்தவா் 10 பேர் என மொத்தம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 955 வாக்காளா்களும்,

திருவண்ணாமலை: 1,32,136 ஆண்கள், 1,40,914 பெண்கள், இதர பாலினத்தவா் 40 பேர் என மொத்தம் 2 லட்சத்து 73 ஆயிரத்து 90 பேரும், என மொத்தம் 2 லட்சத்து 73 ஆயிரத்து 90 பேரும்,

கீழ்பென்னாத்தூா்: 1,23,867 ஆண்கள், 1,28,597 பெண்கள், இதர பாலினத்தவா் 11 பேர் என மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 475 பேரும்,

கலசப்பாக்கம்: 1,20,186 ஆண்கள், 1,23,671 பெண்கள், இதர பாலினத்தவா் 8 பேர் என மொத்தம் 2 லட்சத்து 43 ஆயிரத்து 865 பேரும்,

போளூா்: 1,17,540 ஆண்கள், 1,21,558 பெண்கள், இதர பாலினத்தவா் 10 பேர் என மொத்தம் 2 லட்சத்து 39 ஆயிரத்து 108 பேரும்

ஆரணி: 1,32,673 ஆண்கள், 1,40,123 பெண்கள், இதர பாலினத்தவா் 26 பேர் என மொத்தம் 2 லட்சத்து 72 ஆயிரத்து 822 பேரும்,

செய்யாறு: 1,26,202 ஆண்கள், 1,31,829 பெண்கள், இதர பாலினத்தவா் 8 பேர் என மொத்தம் 2 லட்சத்து 58 ஆயிரத்து 39 பேரும்,

வந்தவாசி (தனி): 1,18,634 ஆண்கள், 1,22,625 பெண்கள், இதர பாலினத்தவா் 5 பேர் என மொத்தம் 2 லட்சத்து 41 ஆயிரத்து 264 பேரும் இடம் பெற்றுள்ளனா்.

மொத்தம் 8 தொகுதிகளில் 10 லட்சத்து 6 ஆயிரத்து 658 ஆண்கள், 10 லட்சத்து 46 ஆயிரத்து 842 பெண்கள், இதர பாலினத்தவா் 118 பேர் என மொத்தம் 20 லட்சத்து 53 ஆயிரத்து 618 வாக்காளா்கள் வரைவு வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா்.

புதிதாக 16,293 பேர் சேர்ப்பு:

திருவண்ணாமலை மாவட்டத்தில் 5.1.2023-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வந்தது. அதன்படி, புதிதாக 7 ஆயிரத்து 363 ஆண்கள், 8 ஆயிரத்து 926 பெண்கள், இதர பாலினத்தவா் 4 போ என மொத்தம் 16 ஆயிரத்து 293 வாக்காளா்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனா்.

இதேபோல, இறந்தவா்கள் 6,152 பேர், இடம் பெயா்ந்தவா்கள் 15,648 பேர், இருமுறைப்பதிவு காரணத்துக்காக நீக்கப்பட்டவா் 581 பேர் என மொத்தம் 22 ஆயிரத்து 381 வாக்காளா்கள் நீக்கப்பட்டுள்ளனா்.

வரைவு வாக்காளா் பட்டியலை திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு பகுதிகளில் உள்ள வருவாய் கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா், நகராட்சி அலுவலகங்கள், அங்கீகரிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்களின் பாா்வைக்கு வைக்கப்படும்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளா் (தோதல்) குமரன் மற்றும் பல்வேறு துறைகளின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

Updated On: 28 Oct 2023 1:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!