/* */

திருவண்ணாமலை நகராட்சி: ஒரு சிறப்பு பார்வை

திருவண்ணாமலை நகராட்சி குறித்த ஒரு சிறப்பு பார்வை மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகள்

HIGHLIGHTS

திருவண்ணாமலை நகராட்சி:  ஒரு சிறப்பு பார்வை
X

திருவண்ணாமலை நகராட்சி அலுவலகம் 

திருவண்ணாமலை நகராட்சி ஒரு சிறப்பு பார்வை

திருவண்ணாமலை நகராட்சியானது திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.

திருவண்ணாமலை 31.01.1896 தேதியிட்ட அரசாணை எண் 577 -ன் படி திருவண்ணாமலை நகராட்சி 01.04.1896 அன்று உருவாக்கப்பட்டது. திருவண்ணாமலை நகராட்சி 01.04.1959 முதல் இரண்டாம் தர நகராட்சியாக மேம்படுத்தப்பட்டு, பின்னர், 01.05.1974 முதல், முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

தேர்வு நிலை நகராட்சியாக 01.05.1998 முதல் தரம் உயர்த்தப்பட்டு பின்னர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 02.12.2008 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போதைய நகராட்சி ஆணையாளராக எஸ். பார்த்தசாரதி, B.P.T.,MSc(Psy) அவர்கள் பொறுப்பில் உள்ளார்

தற்போது நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் இந்த நகராட்சி பெண்கள் பொதுப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது

திருவண்ணாமலை நகராட்சியில் மொத்த வார்டுகள் 39

இதில் ஒதுக்கீடு பற்றிய விபரம்

எஸ்சி வார்டுகள் 3, 19

எஸ்சி பெண்கள் வார்டுகள் 9, 22, 36

பெண்கள் பொதுப்பிரிவு வார்டுகள் 2, 4, 8, 12, 13, 15, 17, 18, 23, 24, 25, 27, 29, 31, 33, 35, 38

திமுக வரலாற்று ஏட்டில் திருவண்ணாமலை நகராட்சி தேர்தல் ஒரு மகத்தான திருப்புமுனையை தந்தது, 1947 இல் நடைபெற்ற நகராட்சி தேர்தலில் முதல் முறையாக திமுக தன் கணக்கை தொடங்கியது திருவண்ணாமலையில் தான்.

திமுகவின் முதல் நகராட்சி தலைவர் ப. உ . சண்முகம், அவர்கள் வெற்றி பெற்றார். இதுவரை நடந்த நகராட்சி தேர்தல்களில் திமுக அதிமுக என்று மாறி மாறி வெற்றி பெற்று வருகின்றனர். 3 முறை காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

மாவட்டத்தின் தலைநகரம் மட்டுமல்ல ஆன்மீகத்தின் தலைநகரமாகும் திருவண்ணாமலை விளங்குகிறது. ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு 5 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வருவர். பவுர்ணமி கிரிவலம் முடிந்தபிறகு கிரிவலப்பாதை முழுவதும் சுத்தம் செய்யும் பணி என்பது நகராட்சிக்கு மிகப்பெரிய ஒரு பணியாகும். இன்றளவும் அதனை மிகச் சிறப்பாக செய்து வருகின்றது திருவண்ணாமலை நகராட்சி.

பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருப்பது

மாடவீதியில் அதாவது தேரடி தெருவில் நகராட்சி சார்பாக இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் ஏற்பாடு செய்து தரவேண்டும்,

மாடவீதி மட்டுமல்லாது அனைத்து வீதிகளையும் புதுப்பித்து தரவேண்டும், அனைத்து வார்டுகளுக்கும் சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்கின்ற பொதுவான கோரிக்கைகளை மக்கள் முன்வைக்கின்றனர்.

Updated On: 28 Jan 2022 6:41 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  6. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  7. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  9. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  10. லைஃப்ஸ்டைல்
    ரோஸ்மேரி எண்ணெய் தேய்ச்சா...! இப்படி ஒரு பலனா? இது தெரியாம போச்சே...!