/* */

தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்

Karthika Deepam Festival -கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம்
X

கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற தீபத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் உடன் மாவட்ட எஸ்பி கார்த்திகேயன்.

Karthika Deepam Festival -திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் முக்கியமான விழாவாகும். கொரோனா தளர்வுகளுக்கு பிறகு இந்த ஆண்டு இவ்விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

நவம்பர் 24 ஆம் தேதி ஸ்ரீ துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தீபத் திருவிழா தொடங்குகிறது.

விழாவில் ஐந்தாம் நாளான டிசம்பர் ஒன்றாம் தேதி வெள்ளி பெரிய ரிஷப வாகனம், 2 ம் தேதி வெள்ளி ரதம், 3 ம் தேதி பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், டிசம்பர் 6 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். 8 ம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கிரிவலம் , டிசம்பர் 7, 8, 9 , தேதிகளில் தெப்பல் திருவிழா நடைபெறுகிறது.

கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

கிரிவலப்பாதையில் வி.ஐ.பி.கள் கிரிவலம் செல்லும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது

ஆலோசனை கூட்டத்தின் போது வி.ஐ.பி.களுக்கு இடம் ஒதுக்கீடு செய்வது, அவர்களின் பாதுகாப்பு ஏற்பாடு, இருக்கைகள் வைப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனால் ஆலோசனை கூட்டத்தில் இருந்து செய்தியாளர்கள் பாதியில் வெளியில் அனுப்பப்பட்டனர்.

முன்னதாக வழக்கமான முன்னேற்பாடு பணிகளான கோவில் வளாகத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, கிரிவலப்பாதையில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பேஸ் டிராக்கிங் மென்பொருள் பொருத்துவது, கிரிவலப்பாதையில் காண்காணிப்பு கோபுரங்கள் அமைப்பது, பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு பணிகள், தற்காலிக பஸ் நிலையங்களில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள், தீபத்தன்று பக்தர்களின் வசதிக்கு ஏற்ப பஸ்கள் இயக்குவது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் 14 ஆயிரம் போலீசார் ஈடுபடுவது, அவர்களுக்கு தேவையான இருப்பிடம் உணவு ஆகியவற்றை ஏற்பாடு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

தீபத்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியின் போது அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் காட்சி அளிக்கும் அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அப்போது வி.ஐ.பி.களுக்கும், வி.வி.ஐ.பி.களுக்கும், மட்டுமே கோவில் வளாகத்தில் இருப்பார்கள்.

ஆளும் கட்சி பிரமுகர்கள் கூடுதலாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சற்று குறைவாகவும் கோயில் வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவர்.

அர்த்தநாரீஸ்வரர் காட்சி தரும் போது சாமானிய பக்தர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த ஆண்டாவது பக்தர்கள் கார்த்திகை தீபத் திருநாளன்று மாலை வருடத்திற்கு ஒருமுறை மட்டும் எழுந்தருளும் அர்த்தநாரீஸ்வரர், அண்ணாமலையார் மற்றும் காலையில் ஏற்றப்படும் பரணி தீபத்தையும் தரிசிக்க முடியுமா, எங்களைப் போன்ற சாமானியர்களை மாவட்ட நிர்வாகம் அனுமதிக்குமா என பக்தர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 5 Nov 2022 6:49 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!