/* */

தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளில் தனி கவனம் செலுத்த வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
X

தீபத்திருவிழா முன்னேற்பாடுகள குறித்த ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை அண்ணாலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா அடுத்த மாதம் 17ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. அதற்கு முன் காவல் தெய்வங்களான துர்க்கை அம்மன் உற்சவம் 14 ஆம் தேதியும், பிடாரி அம்மன் உற்சவம் 15 ஆம் தேதியும், விநாயகர் உற்சவம் 16 ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு தீபத்திருவிழாவுக்கு பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரிக்கும், அதிகபட்சம் 40 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, முன்கூட்டியே ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. அதையொட்டி, கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள குறித்த ஆலோசனைக் கூட்டம், அண்ணாமலையார் கோயில் நிர்வாக அலுவலகத்தில் நேற்று கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

அதில், எஸ்பி கார்த்திகேயன், கூடுதல் கலெக்டர் ரிஷப், அறங்காவலர் குழுத் தலைவர் ஜீவானந்தம், கோயில் இணை ஆணையர் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது, துறைவாரியாக தீபத்திருவிழாவுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு நடத்தினார். குறிப்பாக, பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முறையாக செயல்படுத்த வேண்டும், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் பணிகளின் முன்னேற்றம் குறித்து வாரந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் என்றார்.

நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி சாலைகளில் பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில் பெயர் பலகைகள் வைக்க வேண்டும். அது மட்டும் இன்றி அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்களிலும் தகவல் பலகை தமிழ் ஆங்கிலம் மற்றும் கூடுதலாக பிற மொழிகளிலும் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

பரணி மற்றும் மகா தீப நிகழ்வுகள் எல்இடி மெகா ஸ்கிரீனில் நேரடி ஒளிபரப்பு செய்யவும், அதற்காக கோயில் உள் பிரகாரம் மற்றும் மாட வீதி உள்ளிட்ட இடங்களில் 16 எல்இடி திரைகள் அமைக்கப்படும் என்றும் கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு வசதிகள் செய்யப்படுவதாகவும் தெரிவித்தனர்.

மேலும், கிரிவலப்பாதையில கூடுதல் மின் விளக்குகள், 26 இடங்களில் மினி குடிநீர் தொட்டிகள் அமைத்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம், 60க்கும் மேற்பட்ட இடங்களில் கழிப்பறை வசதிகள், கூடுதலாக நடமாடும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கூடுதலான தூய்மைப் பணியாளர்களை நியமித்து, தீபத்திருவிழா நடைபெறும் 10 நாட்களும் தூய்மைப்பணியை தடையின்றி மேற்கொள்ளவும், தற்காலிக பஸ் நிலையங்கள், கிரிவலப்பாதை உள்ளிட்ட பகுதிகளில் குவியும் குப்பை கழிவுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார். சுகாதார பணிக்கு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் பேசுகையில் இந்த ஆண்டு கார்த்திகை தீபத் திருவிழாவின்போது 13 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றார்.

மேலும், தீபத்திருவிழா பாதுகாப்புக்காக கூடுதலாக இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தவும், கோயில் நுழைவு வாயில்களில் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்ட நவீன கருவிகள் பொருத்தி கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

மேலும் காலை மாலை சுவாமி வீதி உலாவின் போது சுவாமிக்கு முன் திருக்கோயில் ஏற்பாடு செய்யும் நாதஸ்வரம், ஒ டல் வாத்தியம், தவிர திருக்கோயில் ஏற்பாடு செய்யும் சிறப்பு வாத்தியங்கள் மட்டும் இசைக்கப்பட வேண்டும்.

தனிநபர்கள் தனியாகவோ கூட்டமாகவோ இசைக்கருவிகளை இசைப்பதை தடுக்க காவல்துறை ஆவன செய்ய வேண்டும்.

தெப்பல் உற்சவத்தின் போது திருக்கோயில் அனுமதிக்கும் நபர்களை தவிர மற்றவர்களை கண்டிப்பாக ஏற காவல்துறை அனுமதிக்க வேண்டாம். என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அனைத்து துறை அதிகாரிகள் ஊழியர்கள் ஒன்றிணைந்து நமது ஊர் திருவிழாவை சிறப்பாக நடத்திட நேரம் காலம் பார்க்க வேண்டாம் என்றும் கலெக்டர் அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இக்கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் , அனைத்து துறை அதிகாரிகள், கலந்து கொண்டனர்.

Updated On: 19 Oct 2023 1:05 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  2. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  3. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  4. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  5. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...
  6. வீடியோ
    Delhi-யில் இனிமே நம்ம தான் Annamalai Mass || #annamalai #delhi...
  7. வீடியோ
    ஊழலில் மிதக்கும் ஆம்ஆத்மிகிழித்து தொங்கவிட்ட...
  8. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  9. வீடியோ
    Modi-யை எதிர்க்க Aam Aadmi செய்த கீழ்த்தரமான செயல் !#annamalai...
  10. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!