/* */

வரைவு வாக்குச் சாவடி பட்டியல் அங்கீகரித்தல் குறித்த ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலையில் வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் அங்கீகரித்தல் குறித்த ஆலோசனை கூட்டம்,கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

வரைவு வாக்குச் சாவடி பட்டியல் அங்கீகரித்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
X

வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் அங்கீகரித்தல் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் அங்கீகரித்தல் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற் றம் மற்றும் பெயர் மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் அங்கீகரித்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் திரு வண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற் றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முருகேஷ் தலைமை தாங்கினார்.

அப்போது கலெக்டர் பேசியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளில் 2,372 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்குச்சாவடிகளில் 1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக இருந்தால் அதனை இரண்டாகப் பிரிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இது போன்ற நிலையில் எந்த வாக்குச்சாவடியும் இல்லை. எனவே வேறு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்களின் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அடையாள அட் டையுடன் இணைக்கும் பணியில் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், வருவாய் அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 18 Sep 2022 11:31 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...