/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரி, குளம், ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற கலெக்டர் உத்திரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற ஆட்சியர் உத்தரவு
X

விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் அடங்கிய கையேட்டினை வெளியிட்ட ஆட்சியர் முருகேஷ்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏரி, குளம், கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளா.

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அப்போது விவசாயிகள் கூறியதாவது:-

பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரண உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உரங்கள் தட்டுபாடின்றி வழங்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளை தூர்வார வேண்டும். கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

10 ஏக்கருக்கு ஒரு இடத்தில் தடுப்பணை அல்லது குளம் வெட்ட வேண்டும். பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இணை பொருட்கள் வாங்கினால் தான் யூரியா வழங்கப்படும் என்று கூறும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதற்கு பதில் அளித்து மாவட்ட கலெக்டர் முருகேஷ் பேசியதாவது:

தமிழக அரசு பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 37 மாவட்டங்களில் வறட்சி, வெள்ளம், பருவம் தவறிய மழை உள்ளிட்ட இயற்கை இடா்பாடுகளால் ஏற்பட்ட சுமாா் 7 லட்சம் ஏக்கா் பரப்பளவு மகசூல் இழப்புக்காக ரூ.560 கோடி இழப்பீட்டு தொகை ஒதுக்கி ஆணை பிறப்பித்தது.

பிரதமரின் பயிா்க் காப்பீடுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்குப் பயிா் காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு பருவத்துக்கு ஏற்ப தரமான பழச்செடிகள், காய்கறி விதைகளை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும்.

மேலும், மாவட்டத்தில் ஏரி, குளம், கால்வாய் ஆக்கிரமிப்புகளை உடனே கண்டறிந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் 53 பிர்காக்கள் 1000 முதல் 1200 அடிக்கு கீழ் நிலத்தடி நீர் சென்று பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. இதையடுத்து பண்ணை குட்டை அமைத்தும், செயல்படாத ஆழ்துளை கிணறுகள் மூலம் மழைநீர் சேகரிப்பு போன்ற நடவடிக்கைகளால் தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

தற்போது கலைஞரின் ஒருங்கிணைந்த கிராம வளர்ச்சி திட்டத்தின் மூலம் கிணறுகள் வெட்டப்பட்டு வருகிறது. மேலும் அரசின் மூலம் வெட்டப்படும் கிணறுகளுக்கு விவசாயிகள் இடம் கொடுக்க முன்வர வேண்டும்.

நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கைகளுக்கு விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

விவசாயிகள் மாநாடு

மேலும் வருகிற அக்டோபர் மாதத்தில் அரசின் சார்பில் வேளாண் விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் முதல்- அமைச்சர் கலந்து கொள்ள உள்ளார்.

இதில் விவசாயிகள் மூலம் விற்பனை அங்காடி வைக்க விருப்பம் உள்ளவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் பெயர் விவரம் தெரிவிக்க வேண்டும். வேளாண் பொறியியல் துறையின் மூலம் 50 சதவீதம் மானியத்தில் உரங்கள் தெளிக்க பயன்படுத்தப்படும் டிரோன் கருவி வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும் 2022-23-ம் ஆண்டிற்கான பயிர் சேதத்திற்கான இழப்பீடு தொகை மாநிலத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார், மண்டல இணை இயக்குனர் சோமசுந்தரம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கவுரி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் நடராஜன், மற்றும் துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Sep 2023 1:39 AM GMT

Related News