/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்தொடங்கி வைத்தார்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்
X

மாவட்ட ஆட்சியர் முருகேஷ் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முகாமினை துவக்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சி துணை சுகாதார நிலையம் அருகே பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தீவிர போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ், குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி தொடங்கி வைத்தார்.

அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சார்பில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் நிகழ்ச்சி அருணை மருத்துவ கல்லூரி துணைத்தலைவர் மருத்துவர் கம்பன், தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கி சிறப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

புதுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், புதுப்பாளையம் சேர்மன் சுந்தரபாண்டியன் உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர்.

நகராட்சி சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் சுகாதார அலுவலர் மருத்துவர் மோகன் கலந்து கொண்டார்

நிகழ்ச்சியில் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் மருத்துவர் செல்வகுமார், வட்டார மருத்துவ அலுவலர் புவனேஸ்வரி, செவிலியர்கள் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Feb 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  2. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  3. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  7. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  9. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  10. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...