/* */

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023

மத்திய அரசின் சார்பில் நடத்தப்படுகின்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023 குறித்த விபரங்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்

HIGHLIGHTS

கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் 2023
X

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள், நாட்டில் உள்ள இளைஞரிடையே விளையாட்டு மற்றும் உடற் தகுதியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசின் சார்பில் நடத்தப்படுகின்ற ஒருங்கிணைந்த விளையாட்டு நிகழ்வாகும்.

இந்த விளையாட்டுப் போட்டிகள் 17 வயதுக்குட்பட்ட மற்றும் 21 வயதுக்குட்பட்ட பிரிவுகளை கொண்டிருந்தது. ஆனால் 2021 ஆம் ஆண்டில் அரியானாவில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் 18 வயதிற்கு உட்பட்ட பிரிவிலும் நடத்தப்பட்டது . அதனை தொடர்ந்து அதே போன்று 2022 மத்திய பிரதேசத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு முதலமைச்சர் எடுத்த நடவடிக்கையின் அடிப்படையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2023 தமிழ்நாட்டில் நடத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனை தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் 2023 ஆம் ஆண்டு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் மிகச்சிறப்பாக நடத்திட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

தமிழ்நாட்டில் உள்ள சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 19ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் சுமார் 5 ஆயிரம் விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .

நடத்தப்பட உள்ள விளையாட்டுகள் விவரம்

தடகளம், கால்பந்து, குத்துச்சண்டை, கையுந்து பந்து, பளு தூக்குதல், ஸ்குவாஷ், வில்வித்தை, ஜூடோ, மேஜைப்பந்து, பேட்மிட்டன், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம், மல்யுத்தம், ஹாக்கி, நீச்சல், கோகோ, ஜிம்னாஸ்டிக், டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், களரி , கூடைப்பந்து , கபடி, சிலம்பம்.

மேலும் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் கூடைப்பந்து, கபடி, கோகோ, வாலிபால், ஹாக்கி மற்றும் கால்பந்து ஆகியவற்றின் தமிழ்நாட்டு அணியும் இடம் பெற உள்ளது.

தமிழ்நாட்டில் சேர்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் அவர்களின் சிறப்பான செயல் திறன் அடிப்படையில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவபடுத்த தேர்வு செய்யப்படுவார்கள் .

தமிழ்நாட்டு அணிகளில் இடம்பெறுவதற்கான தேர்வு போட்டிகள் ஏற்கனவே நடைபெற இருந்த நிலையில் மழையின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் நடத்தப்பட உள்ளது

கூடைப்பந்து பெண்கள்: வருகிற 12-ஆம் தேதி காலை 7 மணி அளவில் மற்றும் ஆண்கள் 13 ஆம் தேதியன்று காலை 7 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளன.

கால்பந்து பெண்கள்: 12ஆம் தேதி காலை 7 மணி அளவில் ஆண்கள் 13ஆம் தேதி காலை 7 மணி அளவில் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

கபடி பெண்கள்: 12ஆம் தேதி அன்று காலை 7 மணி அளவில் ஆண்கள் 13 ஆம் தேதி அன்று காலை 7 மணி அளவில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.

மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் , 04175-233169, 7401703484 என்ற எண்ணில் அனைத்து வேலை நாட்களிலும் அலுவலக நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு திறமை மற்றும் திறன்களை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அந்தந்த விளையாட்டு பிரிவுகளில் தகுந்த பயிற்சி அளிக்கப்படும்.

பங்கேற்பதற்கு தகுதி பெற விளையாட்டு வீரர்கள் வயது சரி பார்த்து செயல்முறைக்கு பின்வரும் ஆவணங்களில் ஏதேனும் இரண்டினை சமர்ப்பிக்க வேண்டும்

ஆதார் அட்டை, பாஸ்போர்ட் ,பள்ளி கல்வி சான்றுகள், பிறப்பு சான்றிதழ் ,

தகுதியுள்ள அனைத்து விளையாட்டு வீரர் வீராங்கனைகளும் தேர்வு போட்டிகளில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Updated On: 11 Dec 2023 3:30 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!