/* */

திருவண்ணாமலையில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு துணை சபாநாயகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
X

பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்த துணை சபாநாயகர்

திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா சிலைக்கு துணை சபாநாயகர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் கொண்டாடினர் இதையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது..

விழாவையொட்டி இன்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட.தி.மு.க. சார்பில் சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி , அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு உணவு வழங்கினார்.

நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திமுக மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் எ. வ. வே. கம்பன், சட்டமன்ற உறுப்பினர் கிரி, முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், நகர கழக செயலாளர் கார்த்திக் வேல்மாறன் , நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேணுகோபால், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் டி.வி.எம்.நேரு, பொதுக்குழு உறுப்பினர் பிரியா விஜயரங்கன், ஆறுமுகம், நகர மன்ற உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், கழக நிர்வாகிகள், பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர் மற்றும் தி.மு.க. தொண்டர்கள்,பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில், நகர செயலாளர் செல்வம் , அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இந்நாள் உள்ளாட்சி, நகராட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், வட்ட கழக செயலாளர் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் தேமுதிக, திராவிட கழகம், செங்குந்தர் அமைப்பினர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், அமுமுக , உள்ளிட்ட கட்சியினரும் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி, போளூர், செய்யாறு, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், கலசப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழா அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவப்படத்திற்கும் , பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On: 15 Sep 2023 6:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...