/* */

அக்னி நட்சத்திரம் துவக்கம்: அண்ணாமலையார் கோவிலில் தாராபிஷேகம்

அக்னி நட்சத்திரம் துவங்கியதையொட்டி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தாராபிஷேகம் நடைபெற்றது.

HIGHLIGHTS

அக்னி நட்சத்திரம் துவக்கம்:  அண்ணாமலையார் கோவிலில் தாராபிஷேகம்
X

கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலை.

சித்திரை மாதம் பின் பகுதியில், அக்னி நட்சத்திரம் துவங்கும். இக்காலத்தை, ஆகம நூல்களில், தோஷகாலம் என்பர். மேலும், நெருப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய் வீட்டில், சூரியன் இருக்கும் காலம், அக்னி நட்சத்திர காலம். இக்காலத்தில் கோவில்களில் கர்ப்ப கிரகத்தில் உள்ள இறைவனை குளிர்விக்க, கர்ப்ப கிரகங்களில் தண்ணீர் கட்டுதல், தாராபிஷேகம் போன்றவை நடக்கும்.

அபிஷேகத்திற்கான பொருட்கள்:

இன்று அண்ணாமலையார் கோவிலில், அக்னி நட்சத்திரம் காலத்தில், சிறு துளையுள்ள வெள்ளி பாத்திரத்தில், பன்னீர் நிரப்பி, அதில் பச்சை கற்பூரம், வெட்டிவேர், விளாமிச்சை வேர் மற்றும் வாசனை திரவியங்கள் இடப்பட்ட பாத்திரம் இறைவன் சிரசில் சொட்டு, சொட்டாக விழும்படி பொறுத்தப்பட்டது. உச்சிகால அபிஷேகம் காலை, 11.30 மணிக்கு முடிந்த பின், தாரா அபிஷேகம் துவங்கி, மாலை 6 மணி வரை நடக்கும். இக்காலத்தில் சிவபெருமான் சிரசில், நாக ஆபரணம் அணிவிக்கப்படாது. வரும் 28ம் தேதி அக்னி நட்சத்திரம் முடியும் வரை, தினசரி தாரா அபிஷேகம் நடைபெறும்.

ஆதி அண்ணாமலையார் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோயில் மற்றும் அஷ்டலிங்க கோயில்கள், உட்பட மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் தாராபிஷேகம் இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்றது.

Updated On: 4 May 2022 12:34 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?