/* */

திருவண்ணாமலையில் பாஜ வேட்பாளருக்காக வாக்கு சேகரித்த நடிகர் கூல் சுரேஷ்

திருவண்ணாமலையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் வாக்கு சேகரித்தார்

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் பாஜ வேட்பாளருக்காக வாக்கு சேகரித்த நடிகர் கூல் சுரேஷ்
X

திருவண்ணாமலை காய்கறி கடையில் அமர்ந்து காய்கறிகளை வியாபாரம் செய்து பாஜ வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த நடிகர் கூல் சுரேஷ்

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சியின் தலைவர்கள் மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். உட்பட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் திருவண்ணாமலை காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடையில் பிக் பாஸ் புகழும் சிரிப்பு நடிகருமான கூல் சுரேஷ் அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் காய்கறிகளை வியாபாரம் செய்து திருவண்ணாமலை நாடாளுமன்றத்தில் பாஜகவில் போட்டியிடும் அஸ்வத்தாமனை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி திருவண்ணாமலை நகரப் பகுதியில் தேரடி வீதி, திருவூடல் தெரு, காமராஜர் சிலை, தாமரை நகர், உள்ளிட்ட பகுதிகளை தொடர்ந்து தேனிமலை பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலில் திறந்த வெளி ஜீப்பில் வாக்குகளை சேகரித்துக் கொண்டிருந்த கூல் சுரேஷுக்கு டீக்கடை அக்கா ஒருவர் டீ கொண்டு வந்து கொடுத்து எங்கள் ஓட்டு உங்களுக்கு தான் என கூல் சுரேஷிடம் கூறினார். அப்போது டீயை வாங்கி பருகுவதற்கு முன்பாக கூல் சுரேஷ் வெந்து தணிந்தது காடு அக்கா கொடுத்த டீயை போடு என்று அக்காவின் பாசமான சூடான டீயை ரைமிங் பாடி கூல் சுரேஷ் டீயை குடித்தார்.

அடே பேருந்தில் தொங்காதீங்கடா

வரும் காலத்தில் மலரும் தாமரையால் இனி திருவண்ணாமலை பகுதியில் ஏசி பேருந்துதான் ஓடும் எனக் கூறி வாக்குகளை சேகரித்தார் கூல் சுரேஷ். மேலும் பேருந்து படிக்கட்டில் தொங்கிக்கொண்டு சென்ற கல்லூரி மாணவர்களிடம் அடே பேருந்தில் தொங்காதீங்கடா உங்களுக்காக வீட்டில் உங்கள் குடும்பத்தினர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என மாணவர்களுக்கு அறிவுரை கூறி மாணவர்கள் இடத்திலும் இளம் தலைமுறை வாக்காளர்கள் இடத்திலும் கூல் சுரேஷ் வாக்குகளை சேகரித்தார்.

பின்னர் காய்கறி மார்க்கெட்டில் உள்ள கடையில் கூல் சுரேஷ் அமர்ந்து கொண்டு பொதுமக்களிடம் காய்கறிகளை வியாபாரம் செய்து திருவண்ணாமலை நாடாளுமன்றத்தில் பாஜகவில் போட்டியிடும் அஸ்வத்தாமனை ஆதரித்து பிக் வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் திருவண்ணாமலை நகர பாஜக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோ கலந்து கொண்டனர்.

Updated On: 9 April 2024 4:47 AM GMT

Related News