/* */

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலையில் நடைபெற உள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் முருகேஷ் தலைமையில் நடைபெற்றது.

HIGHLIGHTS

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள்  ஆய்வு கூட்டம்
X

கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டம்.

திருவண்ணாமலையில் நடைபெற உள்ள சித்ரா பவுர்ணமி விழா மற்றும் கிரிவலத்தை முன்னிட்டு துறை வாரியாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு ஆட்சியர்ர் முருகேஷ் தலைமை தாங்கி பேசியதாவது:-

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் சித்ரா பவுர்ணமி விழா மற்றும் கிரிவலம் ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்த வருடமும் சித்ரா பவுர்ணமி வருகிற மே மாதம் 4-ம் தேதி இரவு தொடங்கி மறுநாள் 5-ந் தேதி இரவு நிறைவடைகின்றது.

சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் 4ம் தேதி இரவு 11.58 மணிக்கு தொடங்கி, 5ம் தேதி இரவு 11.35 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 5ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

இந்த வருடமும் பல்வேறு நாடுகளிருந்தும், மாநிலங்களில் இருந்தும், மாவட்டங்களில் இருந்தும் சுமார் 20 லட்சம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பக்தர்கள் தொடர்ந்து சாமியை தரிசனம் செய்ய வசதியாக கட்டணமில்லா தரிசன சேவை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு வழி தரிசனம் செய்ய விரும்புவோர் நலன்கருதி, ரூ.50-க்கான கட்டண சேவை வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழக்கம் போல் கிழக்கு ராஜ கோபுரத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவர்

இந்த ஆண்டு கிழக்கு ராஜகோபுரத்தில் வலது உட்புறம் வழியே அனுமதிக்கப்பட்டு 1000 கால் மண்டபத்தில் பக்தர்களை அமர வைத்து ஒருவர் பின் ஒருவராக வள்ளால மகாராஜா கோபுரத்தின் வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.

மேலும் கிரிவலப் பாதையில் பக்தவர்களின் வசதிக்காக மூன்று இடங்களில் இளைப்பாறும் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி இளைப்பாறும் கூடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் கட்டணம் இல்லாத சேவையாக பயன்படுத்தும் வகையில் தனித்தனியே குளியல் அறை கழிவறைகள் வசதிகள் செய்யப்படும்.

பொது தரிசன வழி மற்றும் சிறப்பு தரிசன வழி ஆகியவற்றில் தற்காலிக நிழற்பந்தல் தேங்காய் நார் தரை விரிப்பு மற்றும் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.

மேலும் பக்தர்கள் வெயில் காரணமாக பாதம் வெப்ப பாதிப்பு ஏற்படாமல் இருக்க திருக்கோயிலில் உள்ள க்யூ வரிசையில் நகரும் தடுப்பான்களுக்கு கீழ் வெள்ளை கூல் பெயிண்ட் அடித்தல் வேண்டும்.

மருத்துவத்துறை மூலம் கிரிவலப் பாதை சுற்றி மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். 108 அவசர கால ஊர்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். தற்காலிக பேருந்து நிலையங்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் எந்த இடையூறும் இல்லாமல் திரும்ப அவர்கள் ஊருக்கு செல்லும் வகையில் தகவல் பலகை அமைத்தல் போன்றவை மேற்கொள்ளப்பட உள்ளது. தீயணைப்புத்துறை தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

14 கிலோ மீட்டர் தூரம் உள்ள கிரிவலப்பாதை சுற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கோவிலின் உள்ளே பக்தர்கள் சென்று தரிசனம் செய்துவிட்டு வருவதற்காக வசதியாக வரிசையை முறை படுத்த வேண்டும். 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட உள்ளனர்.

கிரிவலம் வரும் பக்தர்கள் ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழியை தவிர்த்து துணிப்பையை எடுத்து வர வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து, சுற்றுச்சூழலை காத்திட முழு ஒத்துழைப்பு வழங்கி பிளாஸ்டிக் மாசில்லா திருவண்ணாமலை மாவட்டத்தை உருவாக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 April 2023 1:04 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூரில் புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி
  2. லைஃப்ஸ்டைல்
    மலர்கள், செடிகளின் வண்ணத்துப்பூச்சிகள்..!
  3. பல்லடம்
    பல்லடம் பொங்காளியம்மன் கோவில் திருப்பணி; அமைச்சா் சேகா்பாபு நேரில்...
  4. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  5. வந்தவாசி
    மது போதையில் ரகளை செய்த மகன்; கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய ‘ பாசக்கார’...
  6. லைஃப்ஸ்டைல்
    நீண்ட நாட்கள் வாழணும்னா.. புரதம் அவசியம் சாப்பிடுங்க..!
  7. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  8. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதிலேயே வயசான தோற்றம்! இதுதான் காரணமா?
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  10. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...