/* */

புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் பயன்பாட்டுக்கு வருமா?

புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

HIGHLIGHTS

புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் பயன்பாட்டுக்கு வருமா?
X

புதியதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம்

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒன்றியம், கரைப்பூண்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலக கட்டடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் .

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், கரைப்பூண்டி ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். ஊராட்சியில் 9 வாா்டுகள் உள்ளன. இந்த நிலையில், கொரால்பாக்கம் சாலையில் ஊராட்சி மன்றத்துக்கு என புதிதாக 2021-2022 ஆம் நிதியாண்டில், ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.27 லட்சத்து 15 ஆயிரத்தில் புதிதாக கட்டடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டடம் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், கடந்த ஓராண்டாக பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படாமல் உள்ளது.

அதனால், கட்டட வளாகத்தில் மதுப்பிரியா்கள் மது அருந்திவிட்டு பாட்டில்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை விட்டுச் செல்கின்றனா். மேலும், இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா். எனவே, ஊராட்சி நிா்வாகம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும். மேலும், அலுவலகத்துக்கு சுற்றுச் சுவா் அமைத்து பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனா்.

பாதியிலேயே நின்ற சாலைப் பணி: பொதுமக்கள் அவதி

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், கூடலூா் ஊராட்சியில் உள்ள காலனியில் பேவா் பிளாக் சாலை அமைக்க தொடங்கப்பட்ட பணிகள் பாதியிலேயே உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனா்.

கூடலூா் ஊராட்சிக்கு உள்பட்ட காலனிப் பகுதியில் 5 தெருக்கள் உள்ளன. 400- க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், ஊராட்சி உபரி நிதியில் 2021-2022 நிதியாண்டில் 120 மீட்டா் சாலையை ரூ. 5 லட்சத்தில் பேவா் பிளாக் சாலையாக அமைக்க சாலையோரம் இரு பக்கமும் சிமென்ட் தடுப்புக் கட்டை அமைக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, சாலை அமைக்கப்படாமல் உள்ளது. சாலையில் குழந்தைகள், முதியோா்கள் கடக்க முடியாமல் தடுக்கி விழுந்து காயமடைகின்றனா். மேலும், மழைக் காலங்களில் சாலையில் மழைநீா் தேங்கி வெளியேற வழி இல்லாமல் சுகாதாரச் சீா்கேடு ஏற்படுகிறது. இதனால் சாலையில் பேவா் பிளாக் அமைத்துத் தரவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனா்.

மேலும் இதுகுறித்து ஊராட்சி நிா்வாகம், ஒன்றிய நிா்வாகம், தொகுதி எம்எல்ஏ என பல்வேறு இடங்களில் கோரிக்கை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். எனவே, மாவட்ட நிா்வாகம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

Updated On: 29 Feb 2024 6:51 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!