/* */

போளூா் ஒன்றிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

போளூா் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் முருகேஷ் ஆய்வு செய்தாா்

HIGHLIGHTS

போளூா் ஒன்றிய வளா்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
X

ஆதி திராவிடர் நல தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர் முருகேஷ்  மற்றும் அதிகாரிகள்

போளூா் ஒன்றியத்தில் 2021-2022 நிதியாண்டில் ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அனந்தபுரம் ஊராட்சி பள்ளகொல்லை கிராமத்தில் ரூ.16 லட்சத்து 46 ஆயிரத்தில் பால் உற்பத்தியாளா்கள் சங்கக் கட்டடப் பணி, அனந்தபுரம்-காளசமுத்திரம் சாலையில் ரூ.40 லட்சத்தில் சிறுபாலம் கட்டும் பணி, காளசமுத்திரம் ஊராட்சியில் ரூ.23 லட்சத்து 43ஆயிரத்தில் ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடம் கட்டும் பணி, ரூ.10 லட்சத்து 93 ஆயிரத்தில் அங்கன்வாடி மையக் கட்டடம், குப்பம் கிராமத்தில் 2020-2021 நிதியாண்டில் ரூ.5 லட்சத்தில் தடுப்பணை அமைக்கும் பணி, குப்பம் கிராமத்தில் மயானத்தில் ரூ.5 லட்சத்து 96 ஆயிரத்தில் காரிய மேடை, சுற்றுச் சுவா் கட்டும் பணி என பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் முருகேஷ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின் போது போளூர் வட்டம் குப்பம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு செய்து பள்ளி மாணவ மாணவிகளிடையே உரையாடினர்

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட வாழைத்தோட்டங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியர், அங்கிருந்த விவசாயிகளிடம் விரைவில் வேளாண்மை துறை அதிகாரிகள் மூலம் பயிர் சேதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்

மேலும், படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் வள்ளலாரின் 200-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. இந்த அன்னதானத்தை ஆட்சியா் தொடக்கிவைத்தாா்

கூடுதல் ஆட்சியா் (பயிற்சி) வீரபிரதாப்சிங், உதவி ஆட்சியா் ரஷ்மா ராணி, மண்டல இணை ஆணையா் கே.பி.அசோக்குமாா், கோயில் செயல் அலுவலா் சிவஞானம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரணிதரன், பாபு, உதவிப் பொறியாளா்கள் படவேட்டான், திவாகா், செல்வி, பணிமேற்பாா்வையாளா்கள் அபிதா, அசேன்பாஷா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Updated On: 16 Dec 2022 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  5. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    ஆணவம்: வாழ்வை சிதைக்கும் நஞ்சு
  7. லைஃப்ஸ்டைல்
    பன்முகத்திறனில் தனித்த அடையாளம், சட்டமேதை அம்பேத்கர்..!
  8. வீடியோ
    🔴LIVE: கர்நாடகாவில் அண்ணாமலை அனல் பறக்கும் பேச்சு! | தொண்டர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீதியின் பக்கம் நில்லுங்கள்..! நீதி கிடைக்கும்..!
  10. வீடியோ
    ஆன்மிகம் கை கொடுக்கும்!படத்தை பார்த்தா என்ன கிடைக்கும்?...