/* */

திருவண்ணாமலை அருகே நகைக்காக மூதாட்டி கொலை

திருவண்ணாமலை அருகே நகைக்காக மூதாட்டியை கொலை செய்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே நகைக்காக மூதாட்டி கொலை
X

திருவண்ணாமலையை அடுத்து மங்கலம் அருகே உள்ள ஆர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சுசிலா(70). இவரது கணவர் பொன்னுசாமி இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவருக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று சுசிலா விறகு வெட்டுவதற்காக அப்பகுதியில் உள்ள ஓடை பகுதிக்கு சென்றுள்ளார். மாலையில் அந்த வழியாக சென்றவர்கள் சுசிலா தலையில் வெட்டு காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை பார்த்து மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மூதாட்டி இறந்த வழக்கில் அதே கிராமத்தை சேர்ந்த 17 வயதுடைய 3 சிறுவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அவர்கள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், ஆள் நடமாட்டம் குறைவாக இருந்த இடத்தில் சுசீலா விறகு வெட்டி கொண்டிருந்தபோது அங்கு வந்த அவர்கள் சுசீலாவை அரிவாளால் வெட்டி காதில் இருந்த 4 பவுன் கம்மலை பறித்து சென்றுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுசீலா உயிரிழந்து தெரியவந்தது. இதனையடுத்து 3 சிறுவர்களையும் கைது செய்து, இன்று கடலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

Updated On: 7 March 2022 7:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!