/* */

புதிய பேருந்துகளை பேரவை துணைத்தலைவர் துவக்கி வைத்தார்

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் 7 வழித்தடங்களில் அரசு பேருந்துகளை துணை சபாநாயகர் பிச்சாண்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

புதிய பேருந்துகளை பேரவை துணைத்தலைவர் துவக்கி வைத்தார்
X

புதிய பேருந்துகளை பேரவை துணைத்தலைவர் பிச்சாண்டி கொடியசைத்து துவக்கி வைத்தார்

கீழ்பெண்ணாத்தூர் தொகுதிக்குட்பட்ட வேட்டவலம் கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளுக்கு புதிய நகரப்பேருந்து அதேபோல் காட்டுமலையனூர் ,வேடநத்தம், பெரிய ஓலைப்பாடி ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிய பேருந்து சேவைகள் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். அரசு போக்குவரத்து கழக திருவண்ணாமலை மண்டல மேலாளர் தசரதன், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கு.பிச்சாண்டி, கலந்து கொண்டு புதிய நகர பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள், கீழ்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தொழிலாளர் முன்னேற்ற சங்க உறுப்பினர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மேலும் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி மேல் பாலானந்தல் ஊராட்சியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை துணை சபாநாயகர் துவக்கி வைத்தார்.

Updated On: 9 Dec 2021 6:16 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மீன ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  6. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  7. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  8. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி