வாகனம் மோதி பேக்கரி தொழிலாளி பலி

லிப்ட் கேட்டு பைக்கில் சென்ற கலசபாக்கத்தை சேர்ந்த பேக்கரி தொழிலாளி வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
வாகனம் மோதி பேக்கரி தொழிலாளி பலி
X

விபத்தில் பலியான பேக்கரி தொழிலாளி சங்கர்

கலசபாக்கத்தை அடுத்த சிறுகிளாம்பாடிையச் சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவர் நாயுடுமங்கலம் கூட்ரோட்டில் உள்ள பேக்கரியில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று மாலை 7.30 மணியளவில் வேலையை முடித்து விட்டு, பேருந்து இல்லாததால் சிறிது தூரம் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நார்த்தாம்பூண்டி தில்லைநகரை சேர்ந்த பிரசாந்த் என்பவரிடம் 'லிப்ட்' கேட்டு ஏறி வந்தார்.

நார்த்தாம்பூண்டியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகில் வரும்போது, அந்த வழியாக எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று திடீரெனன பிரசாந்தின் மோட்டார்சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

அதில் சங்கருக்கு தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். மோட்டார்சைக்கிைள ஓட்டி வந்த பிரசாந்த் படுகாயம் அடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து கலசபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 3 Jan 2022 7:31 AM GMT

Related News

Latest News

  1. கும்மிடிப்பூண்டி
    பக்தர்கள் வசதிக்காக கட்டப்பட்ட குளியல் கழிவறை கட்டடத்தை சீர் செய்ய...
  2. டாக்டர் சார்
    பெருஞ்சீரகத்தில் கலப்படம்: கண்டறிவது எப்படி? உணவு பாதுகாப்பு அலுவலரின்...
  3. விளாத்திகுளம்
    விளாத்திகுளம் அருகே சூறைக்காற்று: 700க்கும் மேற்பட்ட வாழை மரங்கள்...
  4. சினிமா
    மும்பையில் வீடு வாங்கியுள்ள தமிழ் நடிகர்கள்!
  5. விழுப்புரம்
    காசநோய் குறித்து பொதுமக்களுக்கு ஆட்சியர் அறிவுரை
  6. தென்காசி
    தென்காசி மற்றும் மதுரை வழியாக காசிக்கு சிறப்பு சுற்றுலா ரயில்
  7. தென்காசி
    தென்காசி அரசு மருத்துவமனையில் இடுப்பு எலும்பு மூட்டு மாற்று அறுவை...
  8. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்டத்தில், அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்