/* */

திருவண்ணாமலை மாவட்டம்; மழை அளவு 65 மிமீ பதிவு

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஜமுனாமரத்தூரில் அதிகபட்சமாக 65 மிமீ மழையளவு பதிவாகி உள்ளது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டம்;  மழை அளவு 65 மிமீ பதிவு
X

திருவண்ணாமலை நகரம் அவலூர்பேட்டை சாலை ரயில்வே கேட் அருகே உள்ள குடியிருப்பில் புகுந்துள்ள வெள்ளநீரில் மீன் பிடித்து மகிழும் மக்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில், இன்று(14-ம் தேதி) காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஜமுனாமரத்தூரில் (ஜவ்வாதுமலை) 65 மி.மீ., மழை பெய்துள்ளது.

ஆரணியில் 34 மி.மீ., செய்யாறில் 37 மி.மீ., செங்கத்தில் 32.20 மி.மீ., வந்தவாசியில் 47.90 மி.மீ., போளூரில் 26 மி.மீ., திருவண்ணாமலையில் 26.40 மி.மீ., தண்டராம்பட்டில் 8.50 மி.மீ., கலசப்பாக்கத்தில் 61.40 மி.மீ., சேத்துப்பட்டில் 25.70 மி.மீ., கீழ்பென்னாத்தூரில் 63.60 மி.மீ., வெம்பாக்கத்தில் 24.50 மி.மீ., என மாவட்டத்தில் சராசரியாக 38 மி.மீ., மழை பெய்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 697 ஏரிகளில் 157 ஏரிகள் நேற்று (13-ம் தேதி) காலை 6 மணி நிலவரப்படி முழுமையாக நிரம்பின. இந்நிலையில், நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழைக்கு, ஒரே நாளில் மேலும் 17 ஏரிகள் நிரம்பி உள்ளன. இதன்மூலம் இன்று (14-ம் தேதி) காலை 6 மணி நிலவரப்படி 174 ஏரிகள், 100 சதவீதம் கொள்ளளவை எட்டி உள்ளது.

22.97 அடி உயரம் உள்ள மிருகண்டா நதி அணையின் நீர்மட்டம் 16.40 அடியாக உள்ளது. அணையில் 52.726 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு விநாடிக்கு 29 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து, விநாடிக்கு 66 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணை பகுதியில் 47.80 மி.மீ., மழை பெய்துள்ளது. 62.32 அடி உயரம் உள்ள செண்பகத்தோப்பு அணையின் நீர்மட்டம் 47.23 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 151.232 மில்லியன் கனஅடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு, 431 கனஅடி தண்ணீர் வருகிறது. அணை பகுதியில் 97.20 மி.மீ., மழை பெய்துள்ளது.

திருவண்ணாமலை அருகே, கிளியாப்பட்டு கிராமத்தில் வெள்ளநீர் சூழ்ந்து சாலையை கடந்து செல்லுகிறது.

இதேபோல், சாத்தனூர் அணைக்கும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 119 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் 116.25 அடியாக இருக்கிறது. அணையில் 6,711 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

குப்பனத்தம் அணைக்கு நள்ளிரவு நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இன்று (14-ம் தேதி) அதிகாலை 2 மணி அளவில், குப்பனத்தம் அணைக்கு விநாடிக்கு 1,500 கனஅடி நீர் வந்தது. அது அப்படியே செய்யாற்றில் திறந்துவிடப்பட்டது. இதனால், செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 59.04 அடி உயரம் உள்ள குப்பனத்தம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 54.25 அடியாக இருந்தது. அணையில் 579.50 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. அணைக்கு விநாடிக்கு 286 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து விநாடிக்கு 228 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்நிலையில், குப்பனத்தம் அணைக்கு நள்ளிரவு நீர்வரத்து திடீரென அதிகரித்ததால், அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டது.

தென்பெண்ணையாறு மற்றும் செய்யாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர கிராம மக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு நீர்வளத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.

Updated On: 14 Nov 2022 4:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  2. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  3. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்
  5. வீடியோ
    வாரணாசியில் Modi !ரேபலேரியில் Rahul ! UP மக்கள் யார் பக்கம்? ||#modi...
  6. ஆன்மீகம்
    ஷீரடி சாய்பாபாவின் அற்புதமான பொன்மொழிகள்
  7. வீடியோ
    இந்திய தேர்தலைக் காண வந்துள்ள உலகளாவிய பிரதிநிதிகள் குழு...
  8. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  9. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  10. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...