அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
செய்யாறு வட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்
HIGHLIGHTS

அரியூர் வரும் முன் காப்போம் மருத்துவ முகாமில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சுகாதார வட்டம் அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட சிறு வஞ்சிப்பட்டு கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் வினோத்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி தினகரன் முன்னிலை நிலைவதித்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசுகையில் இந்த மருத்துவ முகாமில் 68 கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் பரிசோதனை, 22 பேருக்கு இ.சி.ஜி. பரிசோதனை, 432 பேருக்கு ஆய்வக பரிசோதனை, 13 பேருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் 16 கண் அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் .
தமிழக அரசு பொது மக்களுக்கு பல நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கூறினார்.
15 கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தை சட்டமன்ற உறுப்பினர் ஜோதி வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜூ ,அரியூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள் ,சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் ,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.