Begin typing your search above and press return to search.
சிறுமியை கர்ப்பமாக்கி தலைமறைவான தாய் மாமாவிற்கு போலீஸ் வலைவீச்சு
செய்யாறு அருகே, சிறுமியை கர்ப்பமாக்கி தலைமறைவான தாய் மாமாவை, போலீசார் தேடி வருகின்றனர்.
HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே சுண்டிபாக்கம் கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவர் இருசக்கர வாகன மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார்.
இவர் தனது அக்கா மகள் 15 வயது சிறுமியை யாருக்கும் தெரியாமல் காதலிப்பதாக கூறி ரகசிய திருமணம் செய்து கொண்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார்.
சிறுமிக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரது பெற்றோர் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.
சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வினோத் மீது போக்சோ சட்டத்தின்கீழ் , அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் வழக்குப்பதிவு செய்து , தலைமறைவான அவரை தேடி வருகிறார்