/* */

பால் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்

BJP News Tamil -திருவண்ணாமலை மாவட்டத்தில், பால்விலை உள்ளி்ட்ட விலைவாசி உயர்வை கண்டித்து, பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

பால் விலை உயர்வை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
X

திருவண்ணாமலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் , வழக்கறிஞர் கிஷோர் குமார், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

BJP News Tamil -பால் விலை, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, ஆகியவற்றை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோட்ட பொறுப்பாளர் குணசேகரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணைத் தலைவர் கிஷோர் குமார், மற்றும் பாஜக நிர்வாகிகள் உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு, கண்டன கோஷங்களை எழுப்பினர்.

ஆரணி

ஆரணி பழைய பஸ் நிலையம் எம்.ஜி.ஆர். சிலை அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகர பா.ஜ.க. தலைவர் சரவணன் தலைமை வகித்தார். இதில் நகர பார்வையாளர் கோபால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். இதே போல, ஆரணியை அடுத்த சேவூரில் பஸ் நிறுத்தம் அருகே எம்.ஜி.ஆர்.சிலை முன்பாக ஆரணி வடக்கு மண்டல தலைவர் ராஜேஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அரசு தொடர்புபிரிவு மாவட்ட தலைவருமான ரவி இதில் சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

போளூர்

ஜவ்வாது மலை ஒன்றியம், ஜமுனா மருதூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, பாஜக ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார் தெற்கு மாவட்ட பாஜக பொறுப்பாளர் தசரதன், மருத்துவப் பிரிவு மாவட்ட தலைவர் ஹரி கோவிந்தன் மாவட்ட செயலாளர் அமுதா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் பேசினர் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய துணைத் தலைவர்கள் ஒன்றிய பொது செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வந்தவாசி

வந்தவாசி தேரடியில் நகரத் தலைவர் சுரேஷ் தலைமையிலும், வந்தவாசி மின்வாரிய அலுவலகம் எதிரில், வந்தவாசி மேற்கு ஒன்றிய தலைவர் நவநிதி தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. மாவட்ட பொதுச் செயலாளர் முத்துசாமி, மாவட்ட செயலாளர் குருலிங்கம் மற்றும் ஒன்றிய பொதுச் செயலாளர்கள், ஒன்றிய தலைவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். மேலும் தெள்ளார், மழையூர், கீழ்க்கொடுங்காலூர் பகுதிகளிலும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செய்யாறு

திருவத்திபுரம் நகராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நகர பாஜக தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார் மாவட்ட துணைத்தலைவர் அருள் முன்னிலை வகித்தார் சிறப்பு பார்வையாளராக மாநில ஓபிசி துணைத் தலைவர் மோகனம் பங்கேற்றார் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் நகர பொது செயலாளர் நகர உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வடக்கு ஒன்றிய தலைவர் பாவேந்தன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் இறைமாணிக்கம், மாவட்ட விவசாய அணி தலைவர் பிரகாஷ், முன்னாள் மாவட்ட செயலாளர் பிச்சாண்டிமுன்னிலை வகித்தனர். ஒன்றிய பொதுச்செயலாளர் வினோத்குமார் வரவேற்றார். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 16 Nov 2022 10:55 AM GMT

Related News