/* */

மொரீஷியஸ் ஜனாதிபதி, காஞ்சிபுரம் கோவில்களில் சுவாமி தரிசனம்

Kanchipuram Temple News Today -மூன்று நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள மொரீஷியஸ் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன் நேற்று முன்தினம் மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா தலங்களை பார்வையிட்டார்.

HIGHLIGHTS

மொரீஷியஸ் ஜனாதிபதி, காஞ்சிபுரம் கோவில்களில் சுவாமி தரிசனம்
X

காஞ்சிபுரத்தில் புகழ் பெற்ற அத்திவரதர் திருக்கோவில் என அழைக்கப்படும் வரதராஜ சுவாமி திருக்கோவிலில், மொரீஷியஸ் ஜனாதிபதி சுவாமி தரிசனம் செய்தார்.

Kanchipuram Temple News Today -மொரீஷியஸ் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன், காஞ்சிபுரம் கோவில்களில் சுவாமி தரிசனம் செய்தார்.

மொரீஷியஸ் ஜனாதிபதி பிரித்விராஜ்சிங் ரூபன், மூன்று நாள் சுற்றுலா பயணமாக, தமிழகத்துக்கு வருகை புரிந்தார். முதல் நாள் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களை பார்வையிட்டார். மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் வடிக்கப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலைநயத்தை கண்டு ரசித்தார். கடற்கரை கோவிலின் இரு கருவறைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகளை பார்வையிட்டார்.அதனைத் தொடர்ந்து படகுத்துறை, அகழி பகுதிகளையும் அவர் பார்வையிட்டார். கடற்கரை கோவில் சிற்பங்களை ரசித்து பார்த்த அவர், அங்கு தன் குடும்பத்தினருடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.

இரண்டாவது நாள், சென்னையில் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பின், மூன்றாவது நாளான இன்று, காஞ்சிபுரத்துக்கு, காலை 8 மணிக்கு, காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை புரிந்தார். அவரை வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி , சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் தியாகராஜன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் வரவேற்றனர்.

வரதராஜ பெருமாள் திருக்கோவில் பட்டர் கிட்டு , மணியம் கிருஷ்ணன், ராகவன் உள்ளிட்டோர் திருக்கோவில் வரலாறு மற்றும் தாயார் சன்னதி, மூலவர் வரதராஜ பெருமாள் ஆகிய சன்னதிகளை சிறப்பு சுவாமி தரிசனம் மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து, தோஷம் நீக்கும் தங்க பள்ளியை வழிபட்டு, கோவில் திருவிழா மற்றும் சிறப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் உலகப் புகழ் பெற்ற கோவில் இட்லி, அவருக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சக்தி பீடங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை புரிந்தார். அவரை திருக்கோவில் நிர்வாகம் சார்பில் நடராஜ சாஸ்திரி , கார்த்தி , மணியம் உள்ளிட்டோர் மேள தாளங்கள் முழங்க இரட்டைக் குடைகளுடன் வரவேற்று, காமாட்சி அம்மனுக்கு, சிறப்பு அர்ச்சனை மேற்கொண்டு பிரசாதங்களை வழங்கினர்.

ஜனாதிபதி வருகை ஒட்டி காஞ்சிபுரம் முழுக்க போலீசார் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

திருக்கோவில் சிறப்புகள் உடைய இடங்களில் நின்று, தனது மனைவி மற்றும் அர்ச்சகர் உடன் மகிழ்ச்சியுடன் அழைத்து பல்வேறு இடங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டு, சிறப்பு விருந்தினர்கள் புத்தகத்தில் தனது வருகையை பதிவு செய்தார்.

மேலும் பஞ்சபூத தலங்களில் ஒன்றான ஏகாம்பரத நாதர் திருக்கோவில் சென்ற அவரை, திருக்கோவில் செயல் அலுவலர்கள் மற்றும் மற்றவர்கள் பூரண கும்பம் மரியாதை அளித்து வரவேற்று, நூற்றாண்டுகள் கண்ட மாமரம், நூறு கால் மண்டபம் குறித்த வரலாற்று விளக்கங்களை அளித்தனர்

அதனைத் தொடர்ந்து, 'குமரக்கோட்டம்' என அழைக்கப்படும் சுப்பிரமணியசாமி திருக்கோவில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 14 Nov 2022 7:28 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  2. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  3. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  4. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  5. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  6. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  9. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்