/* */

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தெருக்கூத்து கலைஞர்கள்

செங்கத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தெருக்கூத்து கலைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய தெருக்கூத்து கலைஞர்கள்
X

வாக்களிப்பது அவசியம் குறித்து தெருக்கூத்து கலைஞர்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட கலெக்டர்

மக்களவை தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஜனநாயகத்தின் கடமையான வாக்களிக்கும் உரிமையை அறிவுறுத்தும் வகையில் பொதுமக்களிடையே 100 சதவீத வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் பள்ளிக்கல்வித்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி துறை, மகளிர் சுய உதவிக் குழுக்கள், வேளாண்மை துறை மூலம் வாக்காளர்களுக்கு வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் தேர்தல் அன்று தவறாமல் வாக்களிக்க வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் வழங்கியும், விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியும், வாக்காளர் வாக்காளர் உறுதிமொழி ஏற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை தொகுதியில் மக்களவைத் தேர்தலில் 100 சதவீதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி செங்கத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தெருக்கூத்து கலைஞர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமை ஏற்று துவக்கி வைத்தார்கள்.

தொடர்ந்து வருவாய்த்துறையினர், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் அனைவரும் வாக்காளர் உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வருவாய்த்துறையினர் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் கிராமிய கூத்துக் கலைஞர்களுடன் சென்று செங்கம் பஜார் வீதியில் உள்ள கடைகளில் விழிப்புணர்வு வாசகம் அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்கள் மற்றும் வாக்காளர் கையேட்டினை வழங்கியும், பேருந்துகளில் ஸ்டிக்கர்களை ஒட்டியும், பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு வாக்காளர் கையேட்டினை வழங்கி வாக்களிப்பதன் அவசியம் குறித்தும் , தேர்தல் அன்று கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என எடுத்துரைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆட்சித் தலைவர் பாஸ்கர பாண்டியன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்நிகழ்வில் தனி துணை ஆட்சியர் தீப சித்ரா, வட்டாட்சியர் முருகன், தனி வட்டாட்சியர் ரேணுகா மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் , தேர்தல் அலுவலர்கள் ,துணை தேர்தல் அலுவலர்கள், துணை வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.

Updated On: 9 April 2024 1:41 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி நாளை பிரார்த்தனை: இந்து முன்னணி அழைப்பு
  2. வீடியோ
    கேள்விகளால் மடக்கிய பத்திரிகையாளர் | பதில் சொல்ல முடியாமல் திணறிய...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலைக்கு கடைசி இடம் வேதனை தெரிவித்த கலெக்டர்..!
  4. திருப்பூர்
    உடுமலையில் தண்ணீரின்றி வறண்ட பஞ்சலிங்க அருவி; ஏமாற்றத்தில் சுற்றுலா ...
  5. வீடியோ
    இந்தியாவில் வரி ஒண்ணா இருக்கு வாழ்க்கை தரம் ஒண்ணா இருக்க?#india...
  6. திருப்பூர்
    திருப்பூர்; 4 மையங்களில் 'நீட்' தேர்வெழுதிய மாணவ மாணவியர்
  7. ஆன்மீகம்
    சாய்பாபாவின் காலமற்ற ஞானம் - ஒரு வழிகாட்டும் ஒளி!
  8. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது!
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளந் தென்றலே...’
  10. லைஃப்ஸ்டைல்
    ஏர் கூலரா வாங்குனீங்க..? இத பண்ணலன்னா ஆஸ்துமா வருதாம் கவனமா இருங்க..!