/* */

கண்ணமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த முதியவர் பலி

கண்ணமங்கலம் அருகே கிணற்றில் குளிக்க சென்ற முதியவர் தவறி விழுந்து பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

HIGHLIGHTS

கண்ணமங்கலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த  முதியவர் பலி
X

பைல் படம்.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் கிராமம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 76). இவர் அதே ஊரில் அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான வயல் கிணற்றில் நேற்று பிற்பகலில் குளிக்க சென்றவர், வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மகன் பாலாஜி மற்றும் உறவினர்கள் தேடியபோது கிணற்றின் அருகே செருப்பு, உடைகள் காணப்பட்டது.

இதனால் தண்ணீரில் மூழ்கி கணேசன் இறந்திருக்கலாம் என கருதினர். மேலும், கிணற்றில் தண்ணீர் 60 அடிக்கும் மேலாக இருந்ததால் அவர்களால் கணேசனை மீட்க முடியவில்லை. இந்நிலையில் இன்று காலை ஆரணி தீயணைப்புத்துறை அலுவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் தண்ணீர் அதிகமாக இருந்ததால் மின்மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றியபின், கணேசனை பிணமாக மீட்டனர். இதையடுத்து கண்ணமங்கலம் போலீசார் கணேசனின் உடலை பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Aug 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  3. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  4. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  5. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  6. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...
  7. கல்வி
    +2 க்கு பிறகு அடுத்தது என்ன? சாதித்து காட்டுவோம்!
  8. லைஃப்ஸ்டைல்
    அதிராமல் அதிரும் மின்னூட்டம், காதல்..!
  9. வீடியோ
    வள்ளுவனை உலக முழுவதும் எடுத்து சென்ற தலைவன் மோடி !! #modi #thirukkural...
  10. வீடியோ
    திருக்குறளை 100 மொழிகளில் மொழியாக்கம் செய்யும் Modi !#thirukural...