/* */

திருவாலங்காட்டில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.. நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்...

திருவள்ளூர் அருகேயுள்ள திருவாலங்காடு பகுதியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

HIGHLIGHTS

திருவாலங்காட்டில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா.. நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்...
X

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரன், ராஜேந்தின் ஆகியோர் வழங்கினர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம், திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில், திமுக இளைஞர் அணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விழாவை முன்னிட்டு திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் திருவாலங்காடு கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மகாலிங்கம் ஏற்பாட்டில், சின்னம்மாபேட்டை கிராமத்தில் 500 ஏழை பெண்களுக்கு புடவையும், 30 முடித்திருத்தம் தொழிலாளர்களுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன.

மேலும், 10 சலவைத் தொழிலாளர்களுக்கு தேவையான இஸ்திரிப் பெட்டிகள், 3 கைப்பந்து விளையாட்டு அணிகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், 500 மரக்கன்றுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. அரிச்சந்திராபுரம் கிராமத்தில் 200 ஏழை பெண்களுக்கு சேலையும், இரும்பு சம்பந்தமான பொருட்களை பட்டை தீட்டும் தொழிலாளர்கள் 10 நபர்களுக்கு சாண இயந்திரமும், முஸ்லீம் பெண் குழந்தைகளுக்கு ஹிஜாப் துணிகளையும், 3 கைப்பந்து விளையாட்டு அணிகளுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களும் வழங்கப்பட்டன.

பொன்னாங்குளம் கிராமத்தில் உள்ள 20 பழங்குடியின குடும்பங்களுக்கு தேவையான அரிசி, காய்கறி உள்ளிட்ட மளிகைப் பொருட்களும், பெண்களுக்கு புடவையும் வழங்கப்பட்டது. சின்னமண்டலி கிராமத்தில் 250 பெண்களுக்கு புடவை வழங்கியும், 5 கைப்பந்து விளையாட்டு அணிகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும், 500 நபர்களுக்கு அறுசுவை உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் திருத்தணி சந்திரன் எம்எல்ஏ, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் திருவாலங்காடு ஒன்றியக் குழு துணைத் தலைவர் சுஜாதா மகாலிங்கம், மாவட்ட துணைச் செயலாளர் ஜெயபாரதி, களாம்பாக்கம் பன்னீர்செல்வம், ஒன்றிய நிர்வாகிகள் ரமேஷ், சண்முகம், நீலவாதி சீனிவாசன், தினகரன், செந்தில்குமார், ஜெகதீசன், ராஜேஸ்வரி பிரபாகர், நந்தகுமார், சரஸ்வதி சந்திரசேகர், காஞ்சிபாடி சரவணன், வழக்கறிஞர் ராஜா, வேழவேந்தன், பன்னீர்செல்வம், செல்வம், சதீஷ், குணசேகர், ஏழுமலை, சரண்யா நாகராஜ், நந்தகுமார், பிரதீப், திருமலையான், புனிதவதி, அப்துல் ரஹீம், பாரூக், ஜாபர், மூர்த்தி, தாமு, ஞானமூர்த்தி, செல்வராஜ், ஸ்ரீதர், விக்னேஷ், பத்மாவதி முருகானந்தம், பரந்தாமன், பாலா, பிரகாசம் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Dec 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  2. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  3. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  4. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  5. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  6. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  7. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  8. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  9. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  10. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...