/* */

திருத்தணி அருகே அடுத்தடுத்த 3 கிராமங்களில் தொடர் கொள்ளை: எஸ்பி ஆய்வு

திருத்தணி அருகே அடுத்தடுத்த 3 கிராமங்களில் தாெைர் கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் பீதி. எஸ்பி நேரில் ஆய்வு.

HIGHLIGHTS

திருத்தணி அருகே அடுத்தடுத்த 3 கிராமங்களில் தொடர் கொள்ளை: எஸ்பி ஆய்வு
X

திருத்தணி அருகே மூன்று கிராமங்களில் 7 வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் 65 சவரன் நகை, ஒரு கிலோ வெள்ளி, இருசக்கர வாகனம், விலை உயர்ந்த செல்போன் கொள்ளை: பொதுமக்கள் பீதி, எஸ்பி நேரில் ஆய்வு.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே 7 இடங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அடுத்த கொல்லகுப்பம் கிராமத்தில் விவசாயி இந்துமதி வீட்டின் பூட்டை உடைத்து 65 சவரன் நகை மற்றும் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளை போயுள்ளது. அதே பகுதியில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும், 2-வது வீட்டில் பொருட்களை அடித்து உடைத்தும் சேதப்படுத்தியும் சென்றதால் வீட்டின் உரிமையாளர் வந்த பிறகே கொள்ளை விவரம் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் திருத்தணி அடுத்த என் என்.கண்டிகையில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து 40 ஆயிரம் மதிப்பிலான செல்போன் மற்றும் உதிரிபாகங்களையும்‌ மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். மேலும் திருத்தணி அடுத்த காசிநாதபுரம் கிராமத்தில் விலை உயர்ந்த இருசக்கர வாகனமும் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. அதே போல் சிவாடா பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையிலும் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏழு வெவ்வேறு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவத்தால் பொதுமக்கள் பீதியில் உறைந்துள்ளனர். கொள்ளைச் சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் நேரில் ஆய்வு செய்தார். திருத்தணி அருகே 7 வெவ்வேறு இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 16 Feb 2022 2:15 AM GMT

Related News