/* */

பெரியபாளையம் அருகே தேர்தலை புறக்கணித்த மூன்று கிராம மக்கள்

பெரியபாளையம் அருகே வடமதுரையில் மூன்று கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

பெரியபாளையம் அருகே  தேர்தலை புறக்கணித்த மூன்று கிராம மக்கள்
X

தேர்தலை புறக்கணித்த 3 கிராம மக்கள்.

பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சியில் 3 கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், வடமதுரை ஊராட்சியில் சுமார் 4000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வடமதுரை ஊராட்சியில் உள்ள,வடமதுரை பெரியகாலனி,எர்ணாகுப்பம், தந்தை பெரியார் நகர், காட்டுக்கொள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இதில் வடமதுரை வருவாய் கிராமம் என்பதை எர்ணாகுப்பம் என்று வருவாய்த் துறையினர் தங்களது பதிவேட்டில் மாற்றினர்.இதனால் தந்தை பெரியார் நகர்,வடமதுரை பெரிய காலனி, காட்டுக்கொள்ளி ஆகிய கிராம மக்கள் தங்களுக்கு பிறப்பு,இறப்பு,மற்றும் சான்றிதழ் பெறுவதிலும், நிலம் வாங்குவது,விற்பதில், வேலை வாய்ப்பு மற்றும் வங்கிக் கடன் உள்ளிட்டவைகள் பெரும்போது இந்தப் பெயர் மாற்றத்தால் தங்களது பணிகள் நடைபெறவில்லை என்று கூறினார்.


இதனைக் கண்டித்து கடந்த மாதம் 3 கிராம மக்கள் ஊரை காணவில்லை என அறிவிப்பு செய்து பெரிய அளவில் மக்கள் ஒன்று திரண்டு அன்று கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இருப்பினும், வருவாய் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று நடைபெற்ற தேர்தலில் மூன்று கிராம மக்கள் வாக்குச்சாவடிக்குச் சென்று ஓட்டு போடாமல் தேர்தலை புறக்கணித்தனர்.

இது குறித்த பகுதி மக்கள் சிலர் தெரிவிக்கையில் தாங்கள் கோரிக்கை நிறைவேற்றாத அரசியல் கட்சிகள் தங்களுக்கு தேவை இல்லை என்றும், அதிகாரிகளும் போராட்டத்தின் போது இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அன்று வாக்குறுதி அளித்து தவறியதால் தாங்கள் பகுதியின் மக்கள் தேர்தலை புறக்கணித்ததாக தெரிவித்தனர்.மேலும் இங்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் புறக்கணிப்பால் அந்த கிராம மக்களுக்கான வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Updated On: 18 April 2024 10:04 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்