/* */

திருவள்ளூரில் குடியரசு தினவிழா: தேசியக் கொடி ஏற்றினார், மாவட்ட ஆட்சியர்

திருவள்ளூரில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசியக் கொடி ஏற்றினார்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் குடியரசு தினவிழா: தேசியக் கொடி ஏற்றினார், மாவட்ட ஆட்சியர்
X

தேசிய கொடி ஏற்றிய பின்னர் வெண்புறாக்களை பறக்க விட்டார் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ்.

திருவள்ளூரில் 74-வது குடியரசு தின விழாவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தியாகிகள் கௌரவிக்கப்பட்டனர். 30 லட்சத்து 7 ஆயிரத்து 456 ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

நாட்டின் 74வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாவட்ட தலைநகர்களிலம் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர்கள் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் மூவர்ண பலூன்களையும் காற்றில் பறக்கவிட்டு, சமாதானத்தை வலியுறுத்தும் வெண் புறாக்களை வானில் பறக்கவிட்டார். அதனைத் தொடர்ந்து திறந்த ஜீப்பில் சென்று காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் கௌரவித்தார்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் படை வீரர்கள் நல அலுவலகம் சார்பில் 5 பயனாளிகளுக்கு வருடாந்திர பராமரிப்பு மானியமாக 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் சார்பில் பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலியை 5 நபர்களுக்கு ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் சிறுதானிய மாவு தயாரிக்க 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும், பெட் பாட்டில்ஸ் தயாரிக்க 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயும் பெட்டிக்கடை வைக்க 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலும்,வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் சகோதரத்துறைகள் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் இடு பொருடகள் மானியத்தில் வழங்க ஒருவருக்கு 8 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பிலும் வேளாண் பொறியியல் துறை சார்பில் ஒரு பயனாளிக்கு பவர் டில்லர் இயந்திரம் 2 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலும், மீன்வளத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு மீன்பிடித் தொழிலுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் வங்கிக் கடனாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

அதனையடுத்து பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இவ் விழாவில் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பா.சீபாஸ் கல்யாண், மாவட்ட வருவாய் அலுவலர் சு.அசோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2023 6:00 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    12 டன் சின்ன வெங்காயத்தை கடத்திய லாரி டிரைவர் உள்ளிட்ட 2 பேர் கைது
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
  3. காங்கேயம்
    இன்று முதல் போராட்டம்; வெள்ளகோவில் விவசாயிகள் முடிவு
  4. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  6. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  7. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  8. ஈரோடு
    ஈரோடு அரசு அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் ஓவியக் கண்காட்சி
  9. ஈரோடு
    ஈரோடு ஸ்ரீ சக்தி அபிராமி தியேட்டரில் கணபதி யாகம்
  10. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு