/* */

பூமிக்கு அடியில் கிடைத்த சிவலிங்கத்திற்கு கோவில் கட்ட மக்கள் கோரிக்கை: அமைச்சர் ஆய்வு

பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் பூமிக்கு அடியில் கிடைத்த சிவலிங்கத்திற்கு கோவில் கட்ட அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

பூமிக்கு அடியில் கிடைத்த சிவலிங்கத்திற்கு கோவில் கட்ட மக்கள் கோரிக்கை: அமைச்சர் ஆய்வு
X

பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் ஆய்வு  மேற்கொண்ட அமைச்சர் சேகர் பாபு.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பூமிக்கடியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இங்கு திருக்கோவில் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கையின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை,சந்திரசேகர், கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ.கோவிந்தராசன், அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் உள்ளிட்டோருடன் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழமைவாய்ந்த திருக்கோயில்களை புனரமைக்க 100கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு 104கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஞாயிறு கிராமத்தில் உள்ள சூரிய பரிகாரஸ்தலமான புஷ்பரதேஸ்வரர் கோவில் கடந்த 2006ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் தற்போது 40லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மேலும் ஞாயிறு கிராமத்தில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பூமிக்கடியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆலயம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

அருமந்தை கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி திருக்கோவில் திருப்பணிகள் மேற்கொள்ள கருத்துரு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கோவில் நிலத்தில் வசிப்பவர்களிடம் வாடகை வசூலித்து கோவிலுக்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் உள்ளிட்ட 26பேர் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளது. பழனி திருக்கோவில் குடமுழுக்கு சிறு பிரச்சினைகள் கூட ஏற்படாமல் நடத்தி முடிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவில் சிலைகளை பாதுகாப்பதற்காக 1850க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பெட்டக அறைகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு 700க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பெட்டக அறைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2024ஆம் ஆண்டிற்குள் சிலைகளை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு பெட்டக அறைகள் கட்டுமான பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும் மாவட்டங்களில் 18க்கும் மேற்பட்ட பாதுகாப்பு மையங்களில் கோவில் சிலைகள் பாதுகாக்கப்பட்டு திருவிழா காலங்களில் சிலைகள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு மீண்டும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் வைப்புத்தொகை திமுக ஆட்சியில் 62கோடி ரூபாய் மேலும் அதிகரித்துள்ளது எனவும், அதிமுக ஆட்சியின் இறுதியில் 458கோடியாக இருந்த வைப்புத்தொகை தற்போது 520கோடியாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

கோவில் வைப்புநிதியில் இருந்து பல கோடி ரூபாய் எடுக்கப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டில் துளியும் உண்மையில்லை எனவும் ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என்ற நிலையை ஏற்படுத்த முடியாமல் அதனை எல்லாம் முதலமைச்சர் நடவடிக்கையால் தவுடுபொடியாக்கி ஆன்மீகவாதிகள் போற்றும் ஆட்சியாக விளங்கி வருவதால் இதுபோன்ற அவதூறுகளை பரப்பி வருவதாக தெரிவித்தார்.

கோவில்களில் அரசால் நியமிக்கப்பட்ட பூசாரிகளுக்கு 500ரூபாய் ஊதியம் என்பதல்ல ஒருகால பூஜை நடைபெற கூடிய கோவில்களில் விளக்கேற்ற கூட வழியில்லாத நிலையில் அவற்றுக்கு 2லட்ச ரூபாய் வைப்பு நிதியாக உயர்த்தி 12957கோவில்களில் தீபம் ஒளிர்வதற்கு முதலமைச்சர் வழிவகை செய்துள்ளதாக தெரிவித்தார். 14957 திருக்கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பணியாளர்கள் ஊக்கத்தொகையாக வங்கி கணக்கில் மாதந்தோறும் 1000ரூபாய் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சிறுவாபுரி முருகன் கோவிலில் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், தனியார் வசூல் வேட்டையை தடுத்து நிறுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Updated On: 17 March 2023 2:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்