/* */

முன் விரோத காரணமாக பால் வியாபாரி அடித்து கொலை: 4 பேர் கைது

முன் விரோத காரணமாக பால் வியாபாரி அடித்து கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

முன் விரோத காரணமாக பால் வியாபாரி அடித்து கொலை: 4 பேர் கைது
X

பால் வியாபாரி முரளி.

திருவள்ளூர் அடுத்த சோழவரம் அருகே பால் வியாபாரி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். பால் வியாபாரி மாடு மேய்த்துக்கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்று சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த கொலை சம்பவத்தில் 4பேரை கைது செய்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். இருசக்கர வாகனம் நிறுத்துவது தொடர்பான முன்விரோதம் என விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த எடப்பாளையம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் முரளி (23). இவர் மாடுகளை வளர்த்து பால் வியாபாரம் செய்து வந்துள்ளார். நேற்று பால் வியாபாரி முரளி தமது தாய் வச்சலாவுடன் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கும்பல் ஒன்று முரளியை இருசக்கர வாகனத்தில் கடத்தி சென்றுள்ளது.

அப்போது அவரது தாய் வச்சலா அலறியடித்தபடி அருகில் இருந்தவர்கள் துணையுடன் அக்கம்பக்கத்தில் தேடியுள்ளார். சோழவரம் ஏரியின் பின்புறத்தில் அமைந்துள்ள அலமாதி ஏரியில் முரளியை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளனர். தலை, முகம், மர்ம உறுப்பில் சரமாரியாக தாக்கி விட்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

கிராம மக்கள் உதவியுடன் மகனை தேடிய தாய் வச்சலா ஏரியில் காயங்களுடன் கிடந்த மகன் முரளியை கண்டு அதிர்ச்சடைந்து கூச்சலிட்டார். பின்னர் முரளியை மீட்டு அலமாதி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், பால் வியாபாரி முரளிக்கு அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி முரளி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து கொலை வழக்கு பதிவு செய்த சோழவரம் போலீசார், திலீப், தீபன், ஆறுமுகம், நவீன் ஆகிய 4பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருசக்கர வாகனத்தை நிறுத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் கொலைக்கு காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கொலையில் ஈடுபட்ட ௪ பேரிடம் தீவிரமாக விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். போலீசாரால் கைது செய்யப்பட்ட திலீப் என்பவர் அலமாதி ஊராட்சிமன்ற தலைவரும் திமுக பிரமுகருமான தமிழ்வாணனின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாடு மேய்த்துக் கொண்டிருந்த பால் வியாபாரி முரளி, தனது தாய் முன்பே கடத்திச் சென்று தாக்கி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 30 Oct 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  2. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  3. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  4. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு
  5. கோயம்புத்தூர்
    கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட தடைகோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலில் காத்திருப்பதுகூட ஒரு தனி சுகமே..!
  7. வானிலை
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச வாய்ப்பு! வானிலை...
  8. தமிழ்நாடு
    சேதமான அரசுப் பேருந்துகளை 48 மணி நேரத்தில் ஆய்வு செய்ய உத்தரவு!
  9. லைஃப்ஸ்டைல்
    செண்பகச்சேரி லக்ஷ்மி நரசிம்மர் கோயில் பால்குட திருவிழா..!
  10. சினிமா
    யாரிந்த ஷாலின் ஸோயா..?