/* */

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 8 கோடியே 9 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. திருவள்ளூரில் அமைச்சர் தகவல்.

HIGHLIGHTS

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 8 கோடியே 9 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு உள்ளது. திருவள்ளூரில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் தகவல்.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.,

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 16 ஆயிரத்து 421 மனுக்கள் பெறப்பட்டது. அவற்றில் 14ஆயிரத்து 139 மனுக்களுக்கு முடிவு செய்யப்பட்டது.

3 ஆயிரத்து 17 மனுக்கள் ஏற்கப்பட்டது. 2 ஆயிரத்து 763 மனுக்கள் காத்திருப்பு பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரத்து 641 மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதில் முதல் கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரம், இலவச வீட்டுமனைப்பட்டா, மூன்று சக்கர வாகனம் என மொத்தம் 8 கோடியே 9 லட்சத்து 44 ஆயிரத்து 712 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தேர்தல் வாக்குறுதிகளை தமிழக முதலமைச்சர் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார். இதன் காரணமாக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என அவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 July 2021 9:18 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  2. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  4. லைஃப்ஸ்டைல்
    ஸ்ரீ கிருஷ்ணரின் ஞான வார்த்தைகள் !
  5. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  7. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  8. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    50 சிறந்த மகளிர் தின வாழ்த்துச் செய்திகள்!
  10. ஈரோடு
    அந்தியூர் பகுதியில் பரவலாக மழை: சேற்றில் சிக்கிய அரசு பேருந்து