/* */

மத்திய அரசின் திட்டங்கள்: திருவள்ளூரில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி ஆலோசனை..

Central Government Schemes -திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி ஆலோசனை மேற்கொண்டார்.

HIGHLIGHTS

மத்திய அரசின் திட்டங்கள்: திருவள்ளூரில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி ஆலோசனை..
X

திருவள்ளூரில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி.

Central Government Schemes -மத்திய அரசின் மூலம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து மத்திய அமைச்சர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் அவ்வப்போது அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருவது வழக்கம். பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், கிராமங்களில் பொது சுகாதாரத்தை மேம்படுத்துதல் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை விரைவுப்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் திட்டங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை வழியாக அந்தந்த மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், அந்தத் திட்டங்களில் சில நேரங்களில் தாமதம் ஏற்படுவதாகவும், போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் அந்தத் திட்டங்களுக்கான பணிகள் தொடங்குவதில் காலமதாமம் ஏற்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், மத்திய அரசுத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக மத்திய நகர கட்டமைப்பு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி திருவள்ளூர் வந்தார். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அவரது தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், ஜல்ஜீவன், பொது கழிப்பிடம் திட்டம், பூங்கா பராமரிப்பு, இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் ஏழை எளிய மக்களிடம் எவ்வாறு கொண்டு சேர்க்கப்படுகிறது என்பது குறித்து அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

மேலும், குறிப்பிட்ட கால அவகாசத்தில் பயனாளிகளுக்கு திட்டங்கள் முடிக்கப்படுகிறதா? மத்திய அரசின் திட்டங்களால் பயன்பெறும் பயனாளிகளுக்கு திட்டங்களுக்கு போதிய தொகை வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் மத்திய நகர கட்டமைப்பு பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்திப்சிங் பூரி அரசு அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

மேலும், மத்திய அரசின் திட்டங்கள் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்படுவதாக பாராட்டு தெரிவித்த அமைச்சர் ஹர்திப்சிங் பூரி, வரும் காலங்கலில் தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

பின்னர், மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த பயனாளிகளை நேரடியாக சந்தித்த மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் பூரி, அரசின் திட்டங்கள் நிறைவேற்றப்படுவது குறித்து கேட்டறிந்தார். மேலும், மத்திய அரசின் இலவச வீடு வழங்கும் திட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணையையும் அவர் வழங்கினார். கூட்டத்தில், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த மத்திய, மாநில அரசு துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 31 Oct 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  2. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  3. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  5. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  6. வீடியோ
    Vijay-யும் நானும் என்ன கள்ள காதலர்களா ?#vijay #thalapathyvijay #seeman...
  7. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  8. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  9. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  10. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...