/* */

பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி அண்ணன், தங்கை உயிரிழப்பு

திருவள்ளூர் அருகே ரைஸ் மில் கட்டுமான பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி அண்ணன், தங்கை உயிரிழந்த சோகம்.

HIGHLIGHTS

பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி அண்ணன், தங்கை உயிரிழப்பு
X
பைல் படம்.

திருவள்ளூர் அருகே கூனிப்பாளையத்தில் அரசிடம் முறையான அனுமதி பெறாமல் ரைஸ் மில் கட்டுமான பணிகள் நடைபெற்ற வரும் இடத்தில் பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தங்கை உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியம், ஊத்துக்கோட்டை அடுத்த கூனிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருக்கு சொந்தமான நிலத்தில் அவருடைய மனைவி லோகநாயகி பெயரில் அரிசி ரைஸ் மில் அமைப்பதற்கான அரசிடம் கட்டுமானப் பணி தொடங்குவதற்கான விண்ணப்பம் செய்யப்பட்டு அனுமதி வராமலே கட்டுமான பணி நடத்தி வருகிறார்.

இந்த அரிசி ரைஸ் மில்லில் கூனிப்பாளையம் அடுத்த இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த குப்பன், அனிதா தம்பதிகள் குடும்பத்துடன் மாதம் 10.ஆயிரம் சம்பளத்துடன் ரைஸ் மில் இடத்தில் தங்கி காவலாளியாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ரைஸ் மில் பகுதியில் எந்தவித கட்டுமான பணிகளும் நடைபெறாமல் இருந்து வந்ததால், குப்பன் வெளியே சென்று இருந்த நிலையில் அவருடைய மனைவி அனிதா அப்பகுதியில் உள்ள காவலாளி அறையில் இருந்துள்ளார்.

அவருடைய குழந்தைகளான 7. வயதுடைய துரைவேல் 6 வயதான சினேகா இருவர் கட்டுமான பணிக்காக சட்ட விரோதமாக சவுடு மண் எடுக்கப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்த பள்ளத்தில் இருவரும் இறங்கி குளிக்க முயன்றுள்ளனர்.

அப்போது துரைவேல் முதலில் பள்ளத்தில் இறங்கிய போது நீரில் மூழ்கி உள்ளார். அவரை காப்பாற்றுவதற்காக இறங்கிய அவருடைய தங்கை சினேகாவும் நீரில் மூழ்கி இறந்துள்ளார்.

அதைத்தொடர்ந்து அவருடைய தாய் இரண்டு குழந்தைகள் வெளியே சென்றவர்கள் நீண்ட நேரம் தங்கி இருக்கும் அறைக்கு வராமல் இருப்பதை கண்டு இருவரையும் தேட ஆரம்பித்துள்ளார்.

அப்போது கட்டுமான பணிக்காக மணல் எடுக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இரு குழந்தைகளும் நீரில் மூழ்கி இறந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதைத் தொடர்ந்து கணவருக்கு தகவல் தெரிவித்ததுடன் கணவர் நீரில் விழுந்து இருந்த இரண்டு குழந்தைகளை மீட்டு கச்சூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்

அங்கே இரு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தைகள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன் தங்கை இருவர் பள்ளத்தில் தேங்கிய மழை நீரில் விழுந்து உயிரிழந்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பென்னலூர் பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கட்டிடப் பணி மேற்கொண்டு வரும் உரிமையாளர் கண்ணன் என்பவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

மேலும் இது குறித்த பகுதி சில தெரிவிக்கையில் அனுமதி பெறாமல் இதுபோன்று கட்டிடப் பணிகளை மேற்கொண்டு சட்டவிரோதமாக சவுடு மண் எடுத்ததின் காரணத்தினால் அதில் மழை நீர் தேங்கி குழந்தைகள் இறந்து போனதாகவும் இதுபோன்று நடவடிக்கையில் ஈடுபடும் உரிமையாளர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 27 Sep 2023 8:48 AM GMT

Related News

Latest News

  1. திருவள்ளூர்
    மின்சாரம்,குடிநீர் தட்டுப்பாடு : பொதுமக்கள் சாலை மறியல்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் தரும் முருங்கைக் கீரை சூப் செய்வது எப்படி?
  3. உலகம்
    இன்னலுறும் நோயாளிகளுக்கு உதவும் செவிலியரை போற்றுவோம்..! நாளை செவிலியர்...
  4. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  5. ஈரோடு
    ஈரோட்டில் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் 100...
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  8. நாமக்கல்
    மோகனூர், பரமத்தி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகள்: ஆட்சியர் ஆய்வு
  9. ஈரோடு
    பவானி பகுதியில் 15 கிலோ அழுகிய பழங்கள் பறிமுதல்
  10. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை