/* */

மிரட்டும் தொனியில் பேசும் ஊராட்சி தலைவர் மீது ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு..!

திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களை மிரட்டும் தொனியில் பேசும் ஊராட்சித்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

மிரட்டும் தொனியில் பேசும் ஊராட்சி தலைவர் மீது ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு..!
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்.

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி தொகுதிக்கு உட்பட்ட விஷ்ணுவாக்கம் பேராத்தூர் ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் அனைவரும் தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்க வேண்டும் என்றும் ஊராட்சி மன்றத் தலைவர் சொன்னால் தான் உங்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் அடியாட்களை வைத்துக்கொண்டு மிரட்டுவதாக ஊராட்சி தலைவர் மீது பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஊராட்சி தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நூற்றுக்கு மேற்பட்ட விஷ்ணுவாக்கம் கிராமத்தினர் கூட்டமாக வந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்த மனுவில், விஷ்ணுவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கீதா மற்றும் அவருடைய கணவன் மோகன் நாயுடு ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஷ்ணுவாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் நிறுவனங்களில் நான் சொன்னால்தான் இந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் மிரட்டும் தொனியில் பேசி மன உளைச்சலை ஏற்படுத்துவதாகவும், அது மட்டும் இல்லாமல் அடியாட்களை வைத்து அச்சுறுத்துவதாகவும், பேராத்தூர் கிராம மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்து இருந்தனர். இதையடுத்து ஊராட்சி தலைவர்குற்றச்சாட்டை கூறி பொதுமக்கள் மனு அளித்ததால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 8 July 2022 11:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  2. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  3. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  4. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  5. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  6. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  8. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  9. திருப்பரங்குன்றம்
    கூடலகப் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!
  10. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...