/* */

திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர் தீ விபத்து

திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் சோபா பெட் தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட திடீர் தீயால் பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே சோபா,பெட் தயாரிக்கும் கடையில் திடீர்  தீ விபத்து
X

திருவள்ளூர் அருகே பெட், சோபா தயாரிக்கும் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து.

திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் பெட், சோபா தயாரிக்கும் கடையில் திடீரென ஏற்பட்ட மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான பஞ்சு மற்றும் தையல் இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது.

திருவள்ளூரை அடுத்த மணவாள நகர் கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் காதர்பாட்ஷா. இவர் அதே பகுதியில் சோபா,மெத்தை. நாற்காலிகள் போன்றவற்றைகளை புதிதாக தயாரித்து விற்பனை செய்வதும் பழைய பொருட்கள் கொண்டு வந்தால் அதை சீரமைத்து தரும் பணியையும் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் கடையில் பணி ஆட்கள் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென கடையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக கடையில் வைக்கப்பட்டுள்ள பஞ்சில் தீப்பற்றி கடை முழுவதும் வேகமாக தீ பரவியது.

இது குறித்து கடை உரிமையாளர் தீயணைப்பு துறையினருக்கும்,காவல் துறையினருக்கும் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் பஞ்சு மற்றும் தேங்காய் நார், போன்ற எரியக்கூடிய தன்மை உள்ள பொருட்கள் கடையில் இருந்ததால் அனைத்து பொருட்களும் தீயில் கருகி சாம்பல் ஆனது. அதன் மதிப்பு சுமார் 3, லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகிப்போனதாக உரிமையாளர் காதர் பாஷா தெரிவித்தார். பின்னர் காதர்பாட்ஷா கொடுத்த புகாரின் பேரில் மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குடியிருப்புகள் நிறைந்தபகுதியில் இது போன்ற தீ விபத்து நடந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 29 March 2024 10:07 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்