/* */

அனல் மின் நிலையத்தின் மின் சாதன பொருட்களை திருடிய 7 பேர் கைது

வடசென்னை அனல் மின் நிலையத்தின் மின் சாதன பொருட்களை திருடிய 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

அனல் மின் நிலையத்தின் மின் சாதன பொருட்களை திருடிய 7 பேர் கைது
X

கைது செய்யப்பட்ட 7 பேருடன் போலீசார் உள்ளனர்.

வடசென்னை அனல் மின் நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெறும் 3வது நிலையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 2.76கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அருகில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த 7பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த அனல் மின் நிலையத்தின் 3ஆம் நிலையின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அனல் மின் நிலையத்தின் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி, டி.வி, பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் நிறுவுவதற்காக பெங்களூருவில் இருந்து வரவழைக்கப்பட்டு இரண்டு கன்டெய்னர்களில் வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 14ஆம் தேதி இரண்டு கன்டெய்னர்களின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டு சுமார் 2.98கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதுபற்றி அனல் மின் நிலைய 17ஆம் தேதி காவலாளி பழனி மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் குற்றப்பிரிவு ஆய்வாளர் டில்லிபாபு தலைமையிலான போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

இதில் அருகில் உள்ள மீனவ கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சிலர் கொள்ளையடித்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஹரிஷ், விக்னேஷ், வாசு, பிரதாப், முத்துப்பாண்டி, அஜித், அருள்பாண்டி ஆகிய 7பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 2.76கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 7 பேரும் பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Updated On: 2 Feb 2023 7:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  4. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...
  5. வீடியோ
    தமிழ்நாடு கெட்டு போனதுக்கு காரணம் சினிமா தான்! #mysskin| #hinduTemple|...
  6. வீடியோ
    நீங்க ஒன்னும் எனக்கு Advice பண்ண வேண்டாம்!...
  7. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  8. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  9. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  10. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...