/* */

தாமரைப்பாக்கம் அருகே முன்மாதிரி நியாயவிலைக்கடையில் ஆய்வு

Food Consumer -தாமரைப்பாக்கம் முன்மாதிரி நியாயவிலைக்கடையில் உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

HIGHLIGHTS

Food Consumer | Tiruvallur News
X

லைமுன்மாதிரி நியாயவிக்கடையில்  ஆய்வு மேற்கொள்ளும் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Food Consumer -பெரியபாளையம் அருகே தாமரைப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் இயங்கி வரும் நியாய விலை கடையை கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

தமிழகம் முழுவதும் மாவட்டங்களில் உள்ள 75 நியாய விலை கடைகளை தேர்ந்தெடுத்து முன்மாதிரி நியாய விலை கடையாக செயல்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

பொது சுகாதாரத் திட்டத்தில் நியாய விலைக் கடைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்க முன்மாதிரிக் கடைகள் அமைக்கப்படவுள்ளன. இக் கடைகள் வண்ணம் பூசி புதுப்பிக்கப்படும். நம்ம ரேஷன் கடை என்ற அடிப்படையில் மாவட்டந்தோறும் 75 முன்மாதிரிக் கடைகள் ஏற்படுத்தப்படும். இக் கடைகளில் கழிப்பறை வசதி, மாற்றுத் திறனாளிகள் வந்து செல்ல சாய்வுத்தள வசதி, முதியோர் அமர ஓய்விருக்கை ஆகியவை அமைக்கப்படும்.

எனவே, ஒவ்வொரு நியாய விலை கடைகளையும் பழுது சரி செய்து அறிவுறுத்தப்பட்ட வண்ணம் பூசுதல், நியாய விலை கடைகளில் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களை தூய்மையாக பராமரித்தல், அறிவிப்பு பலகைகளை புதிதாக நிறுவுதல், நியாய விலை கடை வேலை நேரங்களில் விற்பனை முனைய இயந்திரங்கள் திறம்பட செயல்படுவதை உறுதி செய்தல், மூத்த குடி மக்களுக்கு தேவைப்படும் வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்சங்களை கொண்டதாக இந்த முன்மாதிரி நியாய விலை கடைகள் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்,திருவள்ளூர் மாவட்டம்,எல்லாபுரம் ஒன்றியம்,தாமரைப்பாக்கம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டிடத்தில் இயங்கி வரும் நியாய விலை கடை மற்றும் கடம்பத்தூர் நியாய விலை கடை உள்ளிட்ட ஐந்து நியாய விலைக் கடைகளின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முன்மாதிரி நியாய விலை கடையாக செயல்பட்டு வருகிறது.

நேற்று கூட்டுறவு உணவு நுகர்வோர் பாதுகாப்பு துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் திடீர் கொட்டும் மழையிலும் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்குப் பின்னர் ராதாகிருஷ்ணன் பொதுமக்களிடம் தரமான பொருட்கள் வழங்கப்படுகிறதா சரியான எடையுடன் அனைத்து பொருட்களும் வழங்குகிறார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு வகையான குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து 3 மாதங்கள் பொருள்கள் வாங்காமல் இருந்தால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது. ஒரு நபர் குடும்ப அட்டையில் 2.45 லட்சம் பேர் இறந்துவிட்டனர். கூட்டு அட்டையில் 14.26 லட்சம் பேர் இறந்துள்ளனர். அத்தகையோரைக் கண்டறிந்து நீக்கவே தொடர்ந்து 3 மாதமாக பொருள் வாங்காமல் உள்ள அட்டைகளைக் கண்காணித்து விசாரிக்கிறோம். விசாரணையில்லாமல் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது என்றார் அவர்

இந்நிகழ்ச்சியின்போது திருவள்ளூர் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, துணைப் பதிவாளர்கள் கருணாகரன், காத்தவராயன்,சார்பதிவாளர்கள் விஜயவேலன்,விஜய்சரவணன்,ஒன்றிய மேலாளர் ஆடல் அரசன், தாமரைப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் பாஸ்கரன், சிற்றெழுத்தர் பரிமளம், விற்பனையாளர் ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 10 Oct 2022 6:05 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  2. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  3. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  4. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  6. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  7. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  8. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  9. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  10. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...