/* */

விசாரணை கைதி இறந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தரக்கோரி மனு

காவல் நிலையத்தில் விசாரணை கைதி இறந்த சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகளை பதிவு தரக்கோரி மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

விசாரணை கைதி இறந்த வழக்கில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தரக்கோரி மனு
X

உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர்கள்.

போலீஸ் நிலையத்தில் விசாரணையின் போது ஒருவர் இறந்து போன சம்பவத்தின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் பதிவை தரக்கோரி உதவி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், பாஜக நிர்வாகியுமான பி.பி.ஜி. டி.சங்கர் கடந்தாண்டு காரில் சென்று கொண்டிருந்தார். நசரத்பேட்டை சிக்னல் அருகே சென்று கொண்டிருந்தபோது காரின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிபட்டு பகுதியை சேர்ந்த சாந்தகுமார்( வயது 29), ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி வார்டு உறுப்பினராக இருந்து வந்த இவர் உட்பட ஏழு பேரை நசரப்பேட்டை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சிறையில் இருந்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியே வந்த சாந்தகுமார் மற்றும் அவருடன் இருந்தவர்கள் செவ்வாய்பேட்டையில் உள்ள நண்பரின் வீட்டில் தங்கி இருந்தார். இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக சாந்தகுமார் உள்ளிட்ட ஏழு பேர் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் சென்ற போலீசார் சாந்தகுமார் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்து செவ்வாய்பேட்டை போலீஸ் நிலையத்தில் வைத்து சரமாரியாக தாக்கியதில் சாந்தகுமார் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்து போனதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அவரது உடல் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் தாக்கியதால் தனது கணவர் இறந்து போனதாகவும் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் இறந்து போன சாந்தகுமார் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சாந்தகுமாரை போலீசார் கைது செய்த இடத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் செவ்வாய்ப்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வழக்கு விசாரணைக்காக பாதுகாத்து தர வேண்டும் என அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் உறவினர்கள் திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர்.

இதையடுத்து அவர்கள் சாந்தகுமாரின் மனைவி செய்தியாளர்களிடம் பேசுகையில்:தனது கணவரை வேண்டுமென்றே பணத்தை பெற்று கொண்டு போலீசார் கொலை செய்துவிட்டதாகவும் இந்த சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட அனைத்து போலீசாரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தங்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும் அதுவரை தனது கணவரின் உடலை வாங்காமல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்து விட்டு சென்றார்.

கொலை வழக்கில் சிறையில் இருந்து வந்தவர் போலீஸ் விசாரணையில் இறந்து போன சம்பவத்தில் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் பதிவுகளை கேட்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் புகார் அளித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 18 April 2024 7:42 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்