/* */

கடைகளுக்கான தவணை செலுத்த 6 மாத அவகாசம்: விக்கிரமராஜா வலியுறுத்தல்!

கடைகளுக்கு மாத தவணை கட்டுவதில் இருந்து 6 மாதம் விலக்கு பெற்றுத்தர வேண்டும் என தமிழக அரசுக்கு விக்கிரமராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

கடைகளுக்கான தவணை செலுத்த 6 மாத அவகாசம்: விக்கிரமராஜா வலியுறுத்தல்!
X

அய்யப்பன்தாங்கல் பகுதி துப்புரவு பனியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை விக்கிரமராஜா தொடங்கி வைத்தார்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் முன்களப் பணியாளர்களாக பணியாற்றக்கூடிய அய்யப்பன்தாங்கல் ஊராட்சிக்குட்பட்ட பகுதி துப்புரவு பனியாளர்களுக்கு 1 மாதத்திற்கு வேண்டிய மளிகை பொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், தமிழக அரசு தளர்வுகளை ஏற்படுத்தி கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வரை சந்தித்து முறையிட உள்ளோம். கடைகள் திறக்கும்போது இடைவெளியோடு வியாபாரம் செய்ய வியாபாரிகளிடம் கேட்டுக் கொள்கிறோம்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் வீடு, வீடாக சென்று பொருட்கள் விற்பனை செய்வதில் புதிதாக வியாபாரம் செய்பவர்கள் உள்ளனர். அவர்கள் அதிக லாப நோக்கில்லாமல் நியாயமான விலையில் பொருட்களை விற்க வேண்டும். விலை ஏற்றம் செய்யப்பட்டால் அவர்கள் வியாபாரம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படும். இதற்கென கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு சுற்றுப்பயணத்தில் அவர்களை கண்காணித்து கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஊழியர்களுக்கு சம்பளம் தர வேண்டும் என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நகராட்சி, பேரூராட்சிகளில் வாடகை பாக்கி உள்ள கடைகளுக்கு சீல் வைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை முதல்வர் பார்வைக்கு கொண்டு செல்ல உள்ளோம்.

மாத தவணை கட்டுவதில் இருந்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்கப்பட்டு ஆறு மாத காலம் அவகாசம் தரவேண்டும் என கோரிக்கை வைக்கிறோம் என தெரிவித்தார்.

Updated On: 2 Jun 2021 2:34 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்