/* */

பொன்னேரி அருகே ஐயப்ப சேவா சங்கம் சார்பில் திருவிளக்கு பூஜை

பொன்னேரி அருகே ஐயப்ப சேவா சங்கம் சார்பில் ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

HIGHLIGHTS

பொன்னேரி அருகே ஐயப்ப சேவா சங்கம் சார்பில் திருவிளக்கு பூஜை
X

பொன்னேரி அருகே ஆயிரம் பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

பொன்னேரி அருகே அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் 42ஆம் ஆண்டு விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கையில் விளக்குகள் ஏந்தி ஐயப்ப சரண கோஷத்துடன் பங்கேற்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடாபுரத்தில் ஐயப்ப சுவாமி விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. திருவேங்கடாபுரத்தில் உள்ள அகில பாரத ஐயப்பா சேவா சங்கத்தின் சார்பில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 42ஆம் ஆண்டு திருவிளக்கு பூஜையை முன்னிட்டு திருவேங்கடாபுரத்தில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் விழா தொடங்கியது. இதில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்குகளை கையில் ஏந்தியபடி ஸ்வாமியே சரணம் ஐயப்பா என சரண கோஷம் முழங்க சுமார் 1 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் வரை ஊர்வலமாக சென்று ஐயப்பனை வணங்கினர்.

ஊர்வல சுற்றுப்பாதையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஐயப்ப சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விளக்கு பூஜையின் போது நடைபெற்ற இரவை பகலாக மாற்றிய வான வேடிக்கைகள் காண்போரை வியக்க வைத்தது. கேரள பாரம்பரிய வாத்தியமான செண்டை மேளம் மற்றும் பக்தர்களின் சரண கோஷம் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த திருவிளக்கு பூஜையில் திருவேங்கடாபுரம், வெண்பாக்கம், தடப்பெரும்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 28 Dec 2022 9:19 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்