/* */

பொன்னேரி நகராட்சி: தலைவராக திமுக துணைத்தலைவராக அதிமுக

பொன்னேரி நகர்மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த பரிமளம் விஸ்வநாதன், துணைத்தலைவராக அதிமுகவை சேர்ந்த விஜயகுமார் ஆகியோர் தேர்வு

HIGHLIGHTS

பொன்னேரி நகராட்சி: தலைவராக திமுக துணைத்தலைவராக அதிமுக
X

பொன்னேரி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில் திமுக 15 இடங்களை வென்றது. அதிமுக 9 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று நகர மன்ற தலைவர் துணைத் தலைவர் தேர்வு நடைபெற்றது. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் 15 வாக்குகள் பெற்று நகரமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் துணை தலைவருக்கான தேர்வு நடந்தது இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட விஜயகுமார் 15 வாக்குகள் பெற்று துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இதனையடுத்து நகரமன்ற தலைவரை கட்சி நிர்வாகிகள் பலர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயகுமாருக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவு மான சிறுனியம் பலராமன் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்.

பின்னர் பொன்னேரி பகுதியில் உள்ள தலைவர்களின் சிலைக்கு துணை தலைவர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Updated On: 5 March 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  2. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  3. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  4. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    காதலை ஆரத்தழுவி காலைப்பொழுதுக்கு ஒரு வணக்கம்..!
  7. திருப்பூர்
    போதைப் பொருள்களை ஒழிக்க மக்களின் போராட்டமே தீா்வு; இந்து முன்னணி...
  8. திருப்பூர்
    வெள்ளக்கோவில் நகராட்சி; ஒரே நாளில் ரூ.1 கோடி வரி வசூல் செய்து சாதனை
  9. லைஃப்ஸ்டைல்
    கொரோனா ஒன்றே போதும் செவிலியர் புகழ் பாட..!
  10. லைஃப்ஸ்டைல்
    6th wedding anniversary quotes- 6 வருட திருமண வாழ்க்கையின் வெற்றிக்கான...