/* */

சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

மாசி மாத முதல் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு அலைமோதிய பக்தர்கள் கூட்டம். மூன்று மணி நேரம் காத்திருந்து தரிசனம்.

HIGHLIGHTS

சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய  பக்தர்கள் கூட்டம்
X

சிறுவாபுரி முருகன் கோவிலில் கூடிய பக்தர் கூட்டம் 

மாசி மாத முதல் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு சிறுவாபுரி முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம் 3. மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னம்பேடு ஊராட்சியில் உள்ள சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும்.

இக்கோவிலுக்கு தொடர்ச்சியாக 6. வாரங்கள் இங்கு வந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினால் தீராத கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. அதிலும் முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமை நாட்களிலும் உள்ளூர் பக்தர்கள் மட்டுமல்லாமல் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம்,செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து வாரந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இதனை அடுத்து இன்று மாசி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை முன்னிட்டு அதிகாலை மூலவருக்கு பால், தயிர், சந்தனம்,இளநீர், ஜவ்வாது, தேன், பன்னீர், திருநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

மாசி மாத முதல் செவ்வாய்க்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆலயத்திற்கு வந்திருந்த பக்தர்கள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூர அளவில் சாலையில் நிழல் இன்றி காத்திருந்து ஆலய மண்டபம் வழியாக ரூபாய் 100, 50.கட்டண வரிசை இலவச தரிசன வரிசையில் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமியே வழிபட்டு செய்தனர்.

ஆலயம் பின்புறம் உள்ள வேப்ப மரத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி பெண்கள் ஊஞ்சல் கட்டியும், வீடு கட்ட செங்கற்களை அடுக்கி வைத்தும், திருமணத்தடை நீங்க கோவில் சுற்றி வளம் வந்தும், அரசியல், ரியல் எஸ்டேட் போன்ற தொழில் வளர்ச்சி அடைய வழிபாடு நடத்தி சுவாமி தரிசனம் செய்தனர்.

மேலும் இது குறித்து ஆலயத்திற்கு பக்தர்கள் கூறுகையில், இத்தகைய பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரம் காத்திருந்து தரிசித்து செல்வதாகவும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு குடிநீர், கழிவறை பக்தர்கள் காத்திருக்க கூடுதல் மண்டபமும் சாலை இருபுறங்களில் நடைபாதை வியாபாரிகள் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் நடத்துவதால் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்படுவதாகவும், குழந்தைகள், முதியோர்கள் எளிதாக தரிசனம் செய்ய க்யூ வரிசை அமைத்து தர வேண்டும், வியாபாரிகளுக்கு மாற்று இடம் தேர்வு செய்து அவர்களுக்கு தேவையான கடைகளை கட்டித் தந்து ஆலயத்திற்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை சரி செய்து தர வேண்டும் என தெரிவித்தனர்.

Updated On: 13 Feb 2024 4:03 PM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  4. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  5. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  6. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  7. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  8. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  9. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  10. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!