/* */

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியது ஆரணி அத்திகுளம் சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை.

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியது ஆரணி அத்திகுளம் சீர் செய்ய பொதுமக்கள் கோரிக்கை.
X

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிய அத்திகுளம்

பெரியபாளையம் அருகே ஆரணி பேரூராட்சியில் உள்ள ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கிய அத்திகுளத்தை ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி பூங்கா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில்.15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பேரூராட்சியில் 200 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த 8.ஏக்கர் பரப்பளவு கொண்ட அத்திகுளம் ஒன்று உள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பான்மை மக்கள் கடந்த ஆண்டுகளில் இந்த குளத்தில் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வந்த நிலையில். தற்போது நாளடைவில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி குறைந்த பரப்பளவும் சுருங்கிப்போனது. மேலும் குளத்தைச் சுற்றி ஆக்கிரமிப்பு செய்து குடியிருக்கும் வீடுகளில் இருந்து கழிவு நீர் குளத்தில் திறந்து விடுவதோடு குப்பை கழிவுகளை இந்த குளத்தில் கொட்டிச் செல்கின்றனர் இதனால் தண்ணீர் மாசடைந்து போயுள்ளது.

மேலும் அதிலிருந்து துர்நாற்றம் பேசுவதோடு கொசுக்களும் அதிகமாக உற்பத்தியாவதால் அப்பகுதி மக்கள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்புக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகமும் பேரூராட்சி நிர்வாகம் கவனத்தில் கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்தின் கரைகளை பலப்படுத்தி தூர்வாரி பூங்கா அமைக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Updated On: 1 Jun 2023 2:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  2. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  3. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  4. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  5. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  7. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  8. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  9. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?