/* */

கல்லூரிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கவரைப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கல்லூரிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

HIGHLIGHTS

கல்லூரிகளுக்கு இடையிலான டி20  கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
X

கவரைப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில் எஸ்ஆர்எம் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது.

கவரைப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியில் எஸ்ஆர்எம் கல்லூரி அணி சாம்பியன் பட்டம் வென்றது. லயோலா கல்லூரி அணியை 22ரன் வித்தியாசத்தில் வீழத்தி சாம்பியன் சுழற்கோப்பையை எஸ்ஆர்எம் கல்லூரி அணி தட்டி சென்றது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியம் கவரைப்பேட்டையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 12ஆம் ஆண்டு மஞ்சுளா முனிரத்தினம் நினைவு சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி கடந்த 24ஆம் தேதி தொடங்கி 5நாட்கள் நடைபெற்றது.

கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 16அணிகள் பங்கேற்றன. இந்த ஆண்டு முதல் பல்கலைக்கழக அணிகளுக்கும் போட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி எஸ்ஆர்எம், சவீதா, சந்தியபாமா உள்ளிட்ட முக்கிய பல்கலைகழக அணிகளும் இந்த ஆண்டு கோதாவில் குதித்தன.

போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடைபெற்று வந்தன. இதன் இறுதிப்போட்டியில் சென்னை லயோலா கல்லூரி அணியும் சென்னை எஸ்ஆர்எம் கல்லூரி அணிகளும் மோதின. டாஸ் ஜெயித்த எஸ்ஆர்எம் அணி பேட்டிங் தேர்வு செய்தது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய எஸ்ஆர்எம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஓவருக்கு 7.4 ரன் என்ற இலக்குடன் களமிறங்கிய லயோலா அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 22ரன் வித்தியாசத்தில் எஸ்ஆர்எம் கல்லூரி அணி சாம்பியன் கோப்பையை தட்டிச்சென்றது. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆர்எம்கே கல்வி குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்னம் வெற்றிபெற்ற எஸ்ஆர்எம் கல்லூரி அணிக்கு சாம்பியன் சுழற்கோப்பையை பரிசாக வழங்கினார்.

இரண்டாம் இடம் பிடித்த லயோலா கல்லூரி அணிக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் தொடர் நாயகன், சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பந்து வீச்சாளர் விருதுகளும் வழங்கப்பட்டன.

Updated On: 30 April 2023 2:30 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  2. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  3. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  4. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  5. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  6. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  7. நாமக்கல்
    இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது...
  8. ஈரோடு
    தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...
  9. வீடியோ
    மனதை நொறுக்கிய MI ! "7 தொடர் தோல்விகள்" !#mi #mumbaiindians...
  10. வீடியோ
    கோடை விடுமுறை கொடைக்கானலில் குவிந்த மக்கள் !#summer #holiday #vacation...