/* */

வருங்காலம் பாஜகவின் காலம்: திருப்பூரில் அண்ணாமலை 'பன்ச்'

வருங்காலம், பாஜகவுக்கான காலம் என்று, பாஜக தலைவராக பொறுப்பேற்கவுள்ள அண்ணாமலை, திருப்பூரில் பேசினார்.

HIGHLIGHTS

வருங்காலம் பாஜகவின் காலம்: திருப்பூரில் அண்ணாமலை பன்ச்
X

திருப்பூருக்கு வந்த அண்ணாமலைக்கு, அமைப்புசாரா தொழிலாளர்கள் சார்பில் வரவேற்பு தரப்பட்டது. 

தமிழக பா.ஜ.க. தலைவராக பொறுப்பேற்க உள்ள, முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி அண்ணாமலை, அதற்கு முன்பாக, கோவையில் இருந்து சென்னைக்கு சுற்றுப்பயணமாக செல்கிறார். இன்று காலை கோவையில் இருந்து அண்ணாமலையில் சுற்றுப்பயணம் தொடங்கியது.

கோவையில் இருந்து வந்த அண்ணாமலைக்கு, அவிநாசி பஸ் ஸ்டாண்டு, திருப்பூர் பஸ் ஸ்டாண்டு ஆகிய இடங்களில் திருப்பூர் மாவட்ட பாஜக சார்பில் உற்சாகமாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அண்ணாமலை பேசியதாவது:

நாட்டுப்பற்று உள்ள கட்சியாக பாஜக மட்டுமே உள்ளது. நீட் வேண்டாம், புதிய கல்வி கொள்கை வேண்டாம், தனியாக விட்டுவிடுங்கள் என தி.மு.க. சொல்கிறது. ஆட்சியை சரியாக நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. தடுப்பூசி செலுத்தும் இடங்களில் தி.மு.க. கட்சி துண்டை போட்டுக்கொண்டு தடுப்பூசி டோக்கனை பெற்றுக்கொள்கிறார்கள். இதனால், சாதாரண மக்களுக்கு தடுப்பூசி கிடைப்பதில்லை. அதை மறைக்க, மோடி தடுப்பூசி கொடுக்கவில்லை என கூறுகின்றனர்.

மத்திய அரசின் திட்டங்களை அதிகம் பெறுகின்ற ஊர் திருப்பூர். நாம் ஆட்சிக்கு வந்தாக வேண்டும். உங்களின் தலைவனாக அல்ல, உங்களின் சேவகனாக பொறுப்பேற்கவுள்ளேன். வருங்காலம் பா.ஜ.க.வின் காலம் என்று, அண்ணாமலை பேசினார்.

முன்னதாக அவிநாசியில் இருந்து திருப்பூர் வரும் வழியில், திருமுருகன் பூண்டியில் விவேகானந்தா சேவாலயம் சார்பில், முன்களப்பணியாளர்களாக பணியாற்றிய தூய்மை காவலர்களுக்கு மளிகை பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை, அண்ணாமலை வழங்கினார்.

இதில், மண்டல தலைவர் வேலுசாமி, ஆளுயர மாலையும், திருப்பூர் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்வேல், வீரவாளையும் வழங்கினர். அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு சார்பாக, அப்பிரிவின் தலைவர் மோகன்குமார் தலைமையில், 75 ஆட்டோக்கள் கொண்டு வரவேற்பு கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ருத்ரகுமார், செயலாளர் மலர்கொடி, மாநில விவசாய அணித்தலைவர் நாகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள், பாஜக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Updated On: 14 July 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. பொன்னேரி
    ஸ்ரீ கரி கிருஷ்ணா பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா!
  2. திருத்தணி
    குடிதண்ணீர் வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்!
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  4. நாமக்கல்
    EVM அறைகளை கண்காணிக்க கூடுதலாக 10 சிசிடிவி கேமராக்கள்!
  5. வந்தவாசி
    கோடைகால விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
  6. திருவண்ணாமலை
    கூட்டாய்வுக்கு உட்படுத்தாத வாகனங்களுக்கு அனுமதி இல்லை, கலெக்டர்...
  7. லைஃப்ஸ்டைல்
    சமையலுக்கு ஏற்ற சிறந்த எண்ணெய் எது தெரியுமா?
  8. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் நீதிமன்ற காவலில் கோவை சிறையில் அடைப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    டெல்லிக்கு ராசானாலும் பாட்டி சொல்லை தட்டாதே!
  10. லைஃப்ஸ்டைல்
    வணக்கம்... பலமுறை சொன்னேன், சபையினர் முன்னே! - தமிழில் காலை வணக்கம்...