/* */

கெட்டுப்போன கேக் விற்பனை; பேக்கரி கடையில் அதிகாரி திடீர் சோதனையால் பரபரப்பு

Tirupur News,Tirupur News Today- பல்லடம் அருகே, கெட்டுப்போன கேக்கை விற்பனை செய்த பேக்கரி கடையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி திடீர் சோதனை நடத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

கெட்டுப்போன கேக் விற்பனை; பேக்கரி கடையில் அதிகாரி திடீர் சோதனையால் பரபரப்பு
X

Tirupur News,Tirupur News Today- கெட்டுப்போன கேக்கை விற்ற பேக்கரியில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். 

Tirupur News,Tirupur News Today - பல்லடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பேக்கரி 30க்கும் மேற்பட்ட கடைகளுடன் இயங்கி வருகின்றன. இங்கு இனிப்பு, கார வகைகள் தயார் செய்யப்பட்டு விற்கப்படுகிறது. சில பேக்கரிகளில் கேக் அயிட்டங்கள் அதிகளவில் தயார் செய்யப்பட்டு, விற்பனைக்கு வைக்கப்படுகிறது. பிறந்த நாள், திருமண நாள் போன்ற விசேஷ நாட்களில் பலரும், கிலோ கணக்கில் கேக் வகைகளை ஆர்டர் செய்து, வாங்கிச் செல்கின்றனர்.

இந்நிலையில், பல்லடம் அரசு மேல்நிலைப்பள்ளி எதிரே உள்ள பேக்கரி ஒன்றில், அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், ‘ரெட் வெல்வெட்’ என்ற பெயரில் விலை உயர்ந்த 2 கேக்குகளை வாங்கி உள்ளார். பின்னர் அருகில் உள்ள தனது வீட்டுக்குச் சென்று மகள்களுக்கு, அந்த கேக்குகளை சாப்பிட கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட இருவரும் வாந்தி வருவதாக கூறி, கேக்கை துப்பி விட்டனர்.

இதையடுத்து அந்த பெண் கேக்கை முகர்ந்து பார்த்தபோது, அது கெட்டுப் போய் துர்நாற்றம் வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் கெட்டுப் போன கேக்குகளை எடுத்துக்கொண்டு, குறிப்பிட்ட அந்த பேக்கரிக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு அவர்கள், ‘வேண்டுமானால் வேறு வாங்கிக்கொள்,’ என அலட்சியமாக பதில் கூறியுள்ளனர். அவர்களது அலட்சியப்போக்கான பதிலை கேட்டு, அந்த பெண் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதுகுறித்து, அந்த பெண் பல்லடம் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் கேசவராஜிடம், புகார் தெரிவித்துள்ளார். புகாரின் பேரில் கெட்டுப்போன கேக்கை விற்ற பேக்கரி கடைக்குச் சென்ற உணவு பாதுகாப்பு அலுவலர், அந்த கடையில் வைக்கப்பட்டிருந்த கேக்குகளை ஆய்வு செய்து, காலாவதியாகி கெட்டுப்போன கேக்குகளை ஆய்வுக்கு எடுத்துச் சென்றார். மேலும், கெட்டுப் போன கேக்குகளை இனி விற்பனை செய்யக்கூடாது.உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும் எனவும், கடை ஊழியர்களிடம் அவர் அறிவுறுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், கெட்டுப் போன கேக் உணவு பாதுகாப்பு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டு, அதன் அறிக்கை வந்த பின்னர், பேக்கரி நிர்வாகம் மீது உணவு பாதுகாப்பு சட்டப்படி வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார்.

கெட்டுப்போன கேக்கை விற்றதால், பேக்கரியில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை நடத்தியது அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிகாரிகள் கவனிப்பார்களா?

பல்லடம் மட்டுமின்றி திருப்பூரிலும் இதுபோல் காலாவதியான உணவு பொருட்கள், இனிப்பு, கார வகைகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட நொறுக்குத்தீனி வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. பல ஓட்டல்களிலும், சமையலறை கூடங்கள் சுகாதாரமாக பராமரிக்கப்படுவதில்லை. உணவு வகைகள், பலகாரங்கள் தரமானதாக இருப்பதில்லை. எனவே, அடிக்கடி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதுபோன்ற திடீர் சோதனைகளை நடத்த முன்வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Updated On: 19 March 2023 10:41 AM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  2. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  3. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  4. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  5. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  6. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  7. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!
  9. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்