/* */

கோவில் விழாவில் எம்.எல்.ஏ பக்திப்பரவசத்துடன் நடனம்

திருப்பூரில் நடந்த கோவில் விழாவில் எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் தலையில் தீர்த்தக்குடம் வைத்துக் கொண்டு பக்திப்பரவசத்துடன் நடனமாடினார்.

HIGHLIGHTS

X

திருப்பூர் அங்கேரிபாளையம் அருகே உள்ள அவிநாசிக்கவுண்டன்பாளையம் மாகாளியம்மன் கோவில் பூச்சாட்டு பொங்கல் விழா கடந்த 16 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து பக்திபரவசத்துடன் ஆடி வந்தனர். இதில் திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார் தீர்த்தக்குடம் எடுத்துக் கொண்டு பக்திப்பரவசத்துடன் நடமாடி வந்தார். இதைத்தொடர்ந்து கோவிலில் பக்தர்கள் உற்சாகத்துடன் தீர்த்தக்குடம் எடுத்து வந்து சாமிதரிசனம் செய்தனர். மேளதாளம், வாண வேடிக்கை என்று களைகட்டிய திருவிழாவில் எம்.எல்.ஏ. விஜயகுமார் தீர்த்தக்குடம் எடுத்து ஆடி வந்ததை அப்பகுதி பொதுமக்கள் ரசித்தனர்.

Updated On: 29 Dec 2020 2:43 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  3. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  4. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்
  6. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வீசும் அனல் காற்று: பொதுமக்கள் தவிப்பு
  7. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  8. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  9. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  10. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது