/* */

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு தமிழ் மாநில கம்யூனிஸ்ட் ஆதரவு

தேர்தல் வாக்குறுதியை செயல்படுத்தாத திமுக அரசுக்கு மாநகராட்சி தேர்தலில் பின்னடைவு-தமிழ் மாநில கம்யூனிஸ்ட் மாநில தலைவர்.

HIGHLIGHTS

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: அதிமுக கூட்டணிக்கு தமிழ் மாநில கம்யூனிஸ்ட் ஆதரவு
X

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அஇஅதிமுக கூட்டணிக்கு ஆதரவு. தமிழ் மாநில கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் கே.பி.சரவணன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அஇஅதிமுக கூட்டணிக்கு ஆதரவு. தமிழ் மாநில கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் கே பி சரவணன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

நடைபெறவிருக்கின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மாநில கம்யூனிஸ்ட் அ.இ.அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவளிப்பதென திருப்பூர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தலைமை செயற்குழு கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் ரேசன் கார்டுதாரர்களுக்கு நிவாரணம் வழங்கியதோடு நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தனியாக தலா 2,000 ரூபாய் ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு கார்டு ஒன்றுக்கு பொங்கல் பொருட்களடங்கிய தொகுப்புடன் பரிசாக 2,500 ரூபாய் வழங்கியது.

மேலும் கொரோனா உச்சத்தில் லட்சக்கணக்கிலான ஏழை, எளிய மக்களின் பசிப் பிணி போக்கிட இலவசமாக ஊரடங்கில் அம்மா உணவகம் மூலமாக உணவு வழங்கியது. கொரோனா வைரஸை கட்டப்படுத்திட சிறப்பாக செயல்பட்டு ஊரடங்கினால் ஏழை, எளிய உழைக்கும் மக்கள் பாதிக்கா வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதால் அ.இ.அ.தி.மு.கவை நகர்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தமிழ்மாநில கம்யூனிஸ்ட் ஆதரிக்கின்றது.

அதிமுக அரசு மருத்துவ மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது. ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கல்விச் செலவை அரசே ஏற்கும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் அறிவித்திருந்தது. உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது இதனை மக்களுக்கு எடுத்துச் சென்று வாக்குகள் கேட்போம் என்று தெரிவித்தார்.

பேட்டியின்போது கிழக்கு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மாநகர் மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட விவசாய அணி செயலாளர் கென்னடி உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 2 Feb 2022 5:36 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  4. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  5. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  6. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  7. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  8. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...
  9. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாமா? தெரிஞ்சுக்கங்க..!
  10. ஈரோடு
    ஈரோடு: அவல்பூந்துறை அருகே தென்னக காசி பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி...